breakfastlunchdinner

Friday, December 23, 2011

புளியில்லா சாம்பார்

INGREDIENTS பட்டியல்





சாம்பார் செய்ய புளி ஊறவைக்க புளி டப்பாவை திறந்து பார்த்தா, சுத்தமா புளியே இல்லையா? சாம்பார்தான் கடையிலேயே விக்குதே வாங்கிக்கலாமேன்னு சொல்லவா இந்த பதிவு? சரி புளியில்லாம சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாமா? திடீர் விருந்தாளிகள் வந்தாலும் இந்த சாம்பாரை நீங்க சுலபமா செய்யலாம். இந்த செய்முறையை எனக்கு என்னோட மாமியார் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு எனது நன்றி!


தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் : 2

தக்காளி : 3

துருவிய தேங்காய் : 2 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம் : சிறிதளவு.

தனியா : 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு : 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் : 2 [அ] 3

பெருங்காயம் : சிறிதளவு.

உப்பு, மஞ்சள் பொடி : தேவைக்கேற்ப

துவரம்பருப்பு : ஒரு கப்.

எண்ணெய் : தேவைக்கேற்ப

கருவேப்பிலை : சிறிதளவு

கொத்தமல்லி : சிறிதளவு


செய்முறை
துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணைய் விட்டு தனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து கொறகொறவென அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கி பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பினை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழைகளை மேலே தூவி விடுங்கள். இப்போ புளியில்லா சாம்பார் ரெடி! பரவாயில்லையே புளியே இல்லாமல் சாம்பார் செஞ்சுட்டியே! சரியான "சமையல் புலி" தான் நீ என்ற பட்டத்தையும் வாங்கிக்கோங்க!

ஆதி வெங்கட்.

21 comments:

அப்பாதுரை said...

சாம்பாரில் புளி ஏன் சேர்க்கிறோம்? வருஷக் கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.

Unknown said...

புளியில்லாமல் சாம்பார் நல்ல ஐடியாதான். செய்து பார்க்க வேண்டும்- சுவை கூடுகிறதா இல்லை குறைகிறதா என்று. பதிவிற்கு நன்றி

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

வை.கோபாலகிருஷ்ணன் said...

புளிப்பற்ற சுவையான சாம்பாருக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Respected Madam,

I am very Happy to share an award with you in the following Link:

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

This is just for your information, please.

If time permits you may please visit and offer your comments.

Yours,
VGK

இராஜராஜேஸ்வரி said...


புளி இல்லாமல் பத்தியமாக இருப்பவர்களுக்கு அருமையான சாம்பார் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html

சசிகலா said...

தங்கள் சாம்பார் இன்று வலைச்சரத்தில் பிரபலமா பேசப்படுதாம் வாங்க வாங்க...
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html?showComment=1381289857959#c6032878679408769451

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Ranjani Narayanan said...

அட! ஆதி!
நீங்கள் இப்படி ஒரு வலைத்தளம் வைத்திருப்பது இன்றுதான் தெரிய வந்தது.முடிந்தபோது தொடருங்கள்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

இளமதி said...

வலைச்சரத்தில் கண்டு வந்தேன் சகோதரி வாழ்த்துக்கள்!..

உங்களை யாருன்னு இப்பதான் நானும் கண்டேன்.. ஏற்கனவே உங்களிடம் வர எண்ணியிருந்தும் இன்று நல்ல சந்தற்பம் கிட்டியது எனக்கும்.

அருமையான சமையல்தளம். ஆமா..
ஏன் இப்போ சமைப்பதில்லை நீங்க இங்கே...
எடுப்புச் சாப்பாடோ...:)

வாழ்த்துக்கள் தோழி!

ADHI VENKAT said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

வை.கோ சார் அளித்த விருதிற்கும்,வலைச்சர அறிமுகத்திற்கும் நன்றி.

ரஞ்சனிம்மா - இந்த தளத்தை என்னுடன் இன்னும் சிலரும் இணைந்து பங்கேற்கிறார்கள்.

Ranjani Narayanan said...

அப்படியா? தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

99Likes said...

நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....

♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com

Tamil Bloggers said...

இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

கதம்ப உணர்வுகள் said...

புளிப்பில்லாம சாப்பிடவே முடியாது என்னால. ஆனா இங்க நீங்க கொடுத்திருக்கும் ரெசிப்பி பார்த்தால் கண்டிப்பா புளி இல்லாம சாம்பார் வைத்து சாப்பிடலாம்னு தெரிந்ததுப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான தொடர் பதிவு ஆரம்பம்...

அழைப்பவர் : சகோதரி தென்றல் சசிகலா அவர்கள்

விவரங்களுக்கு : இணைப்பு வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

சசிகலா said...

வணக்கம். தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம் இருப்பின் தென்றல் வருகை தரவும்.

Thenammai Lakshmanan said...

அருமைப்பா !

Thenammai Lakshmanan said...

இதுக்குப் பின்னே ஏன் எழுதல..

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines