breakfastlunchdinner

Saturday, December 16, 2006

கதிர்வடை

தேவையான பொருட்கள்

அரிசிமாவு-100g
கடலைமாவு-100g
மைதாமாவு-100g
பெரியவெங்காயம்-2
கறிவேப்பிலை-2 கொத்து
வேர்க்கடலை-100g
மிளகாய்த்தூள்-2 கரண்டி
பெருங்காயத்தூள்-அரை கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை

மாவு வகைகளை நன்கு கலந்து கொள்ளவும். வெங்காயத்தை காரட் துருவியில் துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலையை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வேர்க்கடலையை மிக்சியில் ஒரு அடி மட்டும் அடித்து சிதைத்துக் கொள்ளவும். (பொடிந்து மாவாகிவிடக்கூடாது) எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு பிசைந்து கொள்ளவும். சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

கதிர்வடை தயார். தனியாகவும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சுவை பற்றி கூறவும்.

எண்ணெய் பலகாரம் சாப்பிடுவது தீமை என்று சொல்லி விட்டு எண்ணெய்ப் பலகாரம் செய்வதையே போட்டிருப்பதற்கான தர்ம அடிகள் வருவதற்குள் எஸ்கேப்....

Friday, December 15, 2006

சுட்ட உணவே சிறந்தது!


எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. முடிந்தவரை எண்ணெயில் பொரிக்காமல் சுட்டு உண்பது நல்லது. ஆனால் சுடப்படும் பண்டம் கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருகிய உணவும் விஷமே. சரியான அளவில் சுடப்பட்ட, அல்லது நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே உடலுக்கு தீங்கில்லாத உணவு வகைகளாகும்.

Thursday, December 14, 2006

வணக்கம்

சமையற்கலை தொடர்பான செய்திகள், புதிய கருவிகள், சமையலறை குறித்த குறிப்புகள், சுவையான சமையல் குறிப்புகள், உணவு மருத்துவம், இயற்கை உணவு போன்றவை இதில் இடம் பெறும். இவற்றில் எந்த வகைப் பிரிவிலேனும் பதிவிட ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் உறுப்பினர்களாக இணையலாம்.

sinthanadhi at gmail dot com முகவரிக்கு மடலிடுக!

செவிக்குணவி ல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். -வள்ளுவர்
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines