breakfastlunchdinner

Monday, December 14, 2009

நாட்டுக்காய்களின் மகத்துவம்

நாட்டுக்காய்களை விரும்பாத பலர் இருக்கலாம். அல்லது அதன் பயனை அறியாமலே சாப்பிட்டுக்கொண்டு இருக்கலாம். நாட்டுக்காய்களின் சிறப்பைச் சொல்லவிழைகிறார் பதிவர் சங்கவி ஆரோக்கியமாய் இருக்கவேண்டுமா ? இதையெல்லாம் சாப்பிடலாமே?

Thursday, June 25, 2009

ஆந்திரா துவையல் வகைகள்

ஆந்திராவில் ஊறுகாய்க்கு அடுத்து சமையலில்
முக்கிய இடம்பெறுவது பச்சடி என அழைக்கப்படும்
துவையல்.

வெள்ளரிக்காய், கறிவேப்பிலை, கொத்துமல்லி,
தேங்காய், பீர்க்கங்காய் தோல், சொள சொள தோல்
என பல வகை துவையல்கள். மேற் சொன்ன எல்லாவற்றிற்கும்
வறுத்துக்கொள்ளும் அயிட்டம் மட்டும் ஒன்று தான்.


INGREDIENTS பட்டியல்: தனியா - 1 ஸ்புன், மி.வற்றல் - தேவையான அளவு, வெந்தயம் 1/2ஸ்பூன், புளி சிறிதளவு, உப்பு தேவையான அளவு

செய்முறை:

பட்டியலில் உள்ள சாமான்களில் புளியைத் தவிர
மற்றவற்றை வாணலியில் எண்ணெய்
1 ஸ்புன் ஊற்றி பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டும் அந்த வாணலியில்
கொஞ்சம் பிரட்டிக்கொண்டால் 1 வாரம் வரைக் கெடாது.


மாங்காய் பச்சடி:

பட்டியலில் இருக்கும் சாமான்களில் புளி மட்டும் வேண்டாம்.

மாங்காயை கழுவி துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் சாமான்களை பொடியாக்கிக்கொண்டு
மாங்காய் துண்டுகளைப்போட்டு அதிகம் மைய்ய அரைக்காமல்
படத்தில் இருப்பது போல் அரைத்தால் துவையல் ரெடி.

உப்பு,புளி,காரச்சுவையுடம் மாங்காய்த் துவையல்.
சோற்றில் பிசைந்து கொள்ளலாம். இட்லி,தோசை,
சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷும் ஆச்சு.

ஃப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைக்கலாம்.Thursday, April 23, 2009

தோசாவக்காய...

என்னது தோசையில் ஆவக்காயான்னு குழம்பாதீங்க.
மஞ்சள் வெள்ளரிக்காயில் போடும் ஊறுகாய் இது.
(ஆந்திரா ஷ்பெஷல்னு சொல்லணுமா!!!))


மாங்காய் ஆவக்காயை விட வேலையும் குறைவு,
ஒரே நாளில் உபயோகிக்கவும் துவங்கலாம்.
அதான் இந்த ஊறுகாயின் ஷ்பெஷாலிட்டி.

செய்வது எப்படின்னு பாப்போம். தேவையான
பொருட்கள் இதோ:INGREDIENTS பட்டியல் மஞ்சள் வெள்ளரிக்காய் -1, நல்லெண்ணெய் 1 கப், அதே கப்பில் அளந்த மிளகாய்த்தூள் 1 கப், 1 கப் உப்பு, கடுகுபொடி 1 கப்


மஞ்சள் வெள்ளரிக்காயில் விதையை எடுத்துவிட்டு
படத்தில் காட்டியிருப்பது போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

வெள்ளரிக்காய் துண்டங்களுடன் உப்பு,காரம், கடுகு பொடி,
எண்ணெய் எல்லாம் சேர்த்து கலக்கி பாட்டில் போட்டு வைக்கவும்.அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.

(ஆந்திரா ஷ்பெஷல் உணவுகள் இந்த ப்ளாக்கில்
தொடரும் :)) )

Thursday, April 2, 2009

ராகி சங்கட்டி


INGREDIENTS பட்டியல் ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.


கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம்.

Monday, February 23, 2009

மசாலா டீ

INGREDIENTS பட்டியல்


வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.

தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ
தயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீ
மிகப் பிரபலம்.

எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பது
பிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்து
வைத்துக்கொள்வேன். அந்த செய்முறையை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.

ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1 கப் (தனித் தனியாக)
பட்டை 1, ஜாதிக்காய் 1(தோல் நீக்கி கொஞ்சம் தட்டிக்கொள்ளவும்)
சுக்குபொடி - 2 அல்லது 3 ஸ்பூன்.

ஒவ்வொரு சாமானையும் மைக்ரோ அவன் பாத்திரத்தில்
போட்டு மூடி 1 நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் இட்டு பொடித்து காற்றுப்புகாத
டப்பாவில் வைத்துக்கொண்டால் மசாலா டீ தயாரிக்கும்
பொழுது உபயோகிக்கலாம்.

மசாலா டீ செய்முறை:

டீக்கு தண்ணீர் வைக்கும் பொழுது டீத் தூளை
போடும் முன்னர் தேவையான அளவு (1/2 ஸ்பூன் 4 பேருக்கு)
மசாலா தூள் போட்டு கொதித்ததும் டீத் தூளை
போட்டு பிறகு பால், சர்க்கரை சேர்த்து
வடிகட்டினால் மசாலா டீ ரெடி.


Google