breakfastlunchdinner

Tuesday, June 14, 2011

பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!!!!

எது கொடுத்தாலும் என் குழந்தை சாப்பிட மாட்டேங்குதே!! இதுதான்
பல அம்மாக்களின் புலம்பல்ஸ். சரியாக சாப்பிடாதகாரணத்தால்
அடிக்கடி அழுது தொந்திரவு கொடுக்கும் குழந்தைகள் சில என்றால்,
ஒண்ணேமே சாப்பிடாவிட்டாலும் எனர்ஜடிக்காக சுத்தும் ஹைபரேக்டிவ்
குழந்தைகள் இன்னொரு வகை. சில குழந்தைகளுக்கோ வகை வகையாக
வேண்டும். என்ன சமைப்பதுன்னு குழம்பி குழம்பி கிடப்போம்.
உங்களுக்கு உதவும் வகையில் எனக்குத் தெரிந்த சில உணவுவகைகளை
இங்கே பதிவிட இருக்கேன். ஆரம்பம் வளரும் குழந்தைகளுக்காக.



தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.

குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.

(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)

சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.

நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது.

நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.

குழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.

நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.

இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்
வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )

காலை 5 மணி - தாய்ப்பால்.(தாய்ப்பால் மறந்த குழந்தை என்றால் பால் 1 டம்பளர்)

காலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்

காலை 9.30 மணி - கொஞ்சம் பால்.

12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.

1.30 மணி - பால்

4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.

6 மணி - தாய்ப்பால்

8மணி - திட ஆகாரம்.

இரவு 10.மணி - தாய்ப்பால்.

செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு
பழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10
மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,
இறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.

(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.




INGREDIENTS பட்டியல்

Sunday, June 12, 2011

பூண்டு ஊறுகாய் ஆந்திரா ஸ்டைல்

பூண்டு ஊறுகாய் ஆந்திரா ஸ்டைல் போடுவது எப்படின்னு பாப்போமா!!

INGREDIENTS பட்டியல்

உரித்த பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,
உப்பு - 1/2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - கொஞ்சமாக
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன்,





செய்முறை பாப்போம்:

வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.

பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines