INGREDIENTS பட்டியல் |
வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.
தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ
தயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீ
மிகப் பிரபலம்.
எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பது
பிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்து
வைத்துக்கொள்வேன். அந்த செய்முறையை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.
ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1 கப் (தனித் தனியாக)
பட்டை 1, ஜாதிக்காய் 1(தோல் நீக்கி கொஞ்சம் தட்டிக்கொள்ளவும்)
சுக்குபொடி - 2 அல்லது 3 ஸ்பூன்.
ஒவ்வொரு சாமானையும் மைக்ரோ அவன் பாத்திரத்தில்
போட்டு மூடி 1 நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் இட்டு பொடித்து காற்றுப்புகாத
டப்பாவில் வைத்துக்கொண்டால் மசாலா டீ தயாரிக்கும்
பொழுது உபயோகிக்கலாம்.
மசாலா டீ செய்முறை:
டீக்கு தண்ணீர் வைக்கும் பொழுது டீத் தூளை
போடும் முன்னர் தேவையான அளவு (1/2 ஸ்பூன் 4 பேருக்கு)
மசாலா தூள் போட்டு கொதித்ததும் டீத் தூளை
போட்டு பிறகு பால், சர்க்கரை சேர்த்து
வடிகட்டினால் மசாலா டீ ரெடி.
23 comments:
Hyderabad "Blue Sea" டேஸ்ட் போல இருக்குமா.??
எனக்கு டீ பிடிக்காது
ஆனாலும் தங்ஸ்கிட்ட சொல்றேன்.
:-))
சோதனை முயற்சிகள் ஹைதை யிலருந்து உலகம் முழுக்க பரவும் ஆபத்து ஆரம்பித்தாகிவிட்டது போலிருக்கிறதே...
Hyderabad "Blue Sea" டேஸ்ட் போல இருக்குமா.??//
எங்க இருக்குன்னு சொல்லுங்க. போய் டேஸ்ட் செஞ்சு பாத்துட்டு சொல்றேன்.
காபியை விட டீ நல்லது ஜமால்.
அதுவும் இந்த மசலா டீ மழைக்காலத்துக்கு அருமையா இருக்கும்.
ஆஷிஷுக்கு இதுவும் பஜ்ஜியும் இருந்தா மழைக்காலத்தைக் கொண்டாடுவான்.
:)))
சோதனை முயற்சிகள் ஹைதை யிலருந்து உலகம் முழுக்க பரவும் ஆபத்து ஆரம்பித்தாகிவிட்டது போலிருக்கிறதே...//
:))) ஒரு முறை ஹைதை வந்து இந்த டீயைக் குடிச்சிட்டு அப்புறமா சொல்லுங்க..
அசத்துங்க..
நானும் பொடிச்சு வச்சு பொடி போடறேன்.. :)
நல்ல டீ போடுறது
உண்மையில்
கஷ்டம்!!
அதுவும் இந்த மசலா டீ மழைக்காலத்துக்கு அருமையா இருக்கும்.
உண்மைதான்
மசாலாடீ நல்ல வாசனை மணத்துடன் சூப்பர இருக்கு. நல்ல ஆரோக்கியமான சாய்....
ஹைதராபத்தில் ஏலக்காயுடன் நிறுத்திக்கொள்வாங்க..
Really beautiful posting!!!
Good idea. Brilliant inspiration!
Have a nice week.
மசாலா டீ...மனம் தூக்குதுங்கோ!! எனக்கு இஞ்சி இல்லாமல் டீ இறங்காது!! நீங்கள் வேறு ஏதோதோ போட சொல்றிங்க, குடிச்சு அசத்திருவொம்ல!
நல்ல பதிவு.மசாலா டீ அருமையாக இருக்கும்.
நானும் பொடிச்சு வச்சு பொடி போடறேன்.. //
ஆஹா
நல்ல டீ போடுறது
உண்மையில்
கஷ்டம்!!//
ஆமாம் தேவா.
காபி போடுவதைவிட டீ போடுவது சவாலானது. பல வகைகளை புகுத்தலாம்.
வாங்க ஃபைஸாகாதர்,
வருகைக்கு மிக்க நன்றி
நன்றி டேவிட் சந்தோஷ்
குடிச்சு அசத்திருவொம்ல!//
அசத்துங்க
வருகைக்கு நன்றி மாதேவி
மசாலா டீ செய்முறையில் பட்டை என்று ஓரிடத்திலும் லவங்கம் பட்டை என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஈழத் தமிழன் எனக்கு இதன் விளக்கத்தினை தரமுடியுமா?
நிர்மலன்.
வாங்க புதினம் நியூஸ்,
பட்டை என்பது லவங்க பட்டையைக் குறிக்கும். (பதிவில் இரண்டு வகையாக சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை)
படத்தில் இருப்பது லவங்கப்பட்டை.
cinnamon sticks
மசாலா டீ சூப்பர்.
உடனே செய்து பார்க்கிறேன்
Post a Comment