breakfastlunchdinner

Tuesday, June 14, 2011

பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!!!!

எது கொடுத்தாலும் என் குழந்தை சாப்பிட மாட்டேங்குதே!! இதுதான்
பல அம்மாக்களின் புலம்பல்ஸ். சரியாக சாப்பிடாதகாரணத்தால்
அடிக்கடி அழுது தொந்திரவு கொடுக்கும் குழந்தைகள் சில என்றால்,
ஒண்ணேமே சாப்பிடாவிட்டாலும் எனர்ஜடிக்காக சுத்தும் ஹைபரேக்டிவ்
குழந்தைகள் இன்னொரு வகை. சில குழந்தைகளுக்கோ வகை வகையாக
வேண்டும். என்ன சமைப்பதுன்னு குழம்பி குழம்பி கிடப்போம்.
உங்களுக்கு உதவும் வகையில் எனக்குத் தெரிந்த சில உணவுவகைகளை
இங்கே பதிவிட இருக்கேன். ஆரம்பம் வளரும் குழந்தைகளுக்காக.தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.

குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.

(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)

சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.

நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது.

நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.

குழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.

நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.

இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்
வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )

காலை 5 மணி - தாய்ப்பால்.(தாய்ப்பால் மறந்த குழந்தை என்றால் பால் 1 டம்பளர்)

காலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்

காலை 9.30 மணி - கொஞ்சம் பால்.

12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.

1.30 மணி - பால்

4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.

6 மணி - தாய்ப்பால்

8மணி - திட ஆகாரம்.

இரவு 10.மணி - தாய்ப்பால்.

செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு
பழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10
மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,
இறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.

(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.
INGREDIENTS பட்டியல்

12 comments:

அம்பாளடியாள் said...

ஆகா!...கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம் இது ஒரு
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும். அப்படிச்சொல்ல மாட்டன்....
இன்னும் இன்னும் போடுங்கோ!.....
(அருமையான பகிர்வுகள் இவை!..)வயிறார உண்டபின் மனமார வாழ்த்துகின்றேன்!..

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - அருமையான ஆலோசனை - க்டைப்பிடிக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
யூஸ்ஃபுல்.பகிர்தலுக்கு நன்றி.
http://zenguna.blogspot.com/

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள்...

மாலதி said...

வாழ்த்துக்கள்.

வலிபோக்கன் said...

எல்லாம் நல்லத்தான் இருக்கு.வச்சு சாப்பிடுவதற்குத்தான் எனக்கு கொடுத்து
வைக்கல.

கீதமஞ்சரி said...

தங்களுடைய இந்தப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

அன்பை தேடி,,அன்பு said...

பயனுள்ள பதிவு

demo said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021

Google