breakfastlunchdinner

Wednesday, March 21, 2007

சாவியைத் தொலைத்துவிடாதீர்கள்

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .
பாட்டி வைத்தியம் என்று சொல்லி கேலி செய்யாதீர்கள்.
சுக்கு கஷாயம் , சீரக கஷாயம் போடுவதற்கு 5 நிமிடமும் குறைந்த அளவு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது . அதற்கு பதில்
150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன் ?

9 comments:

துளசி கோபால் said...

உடம்பு ரொம்ப சூடாய் இருக்கு.

நாலு உளுந்துவடை பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:-))))

வடுவூர் குமார் said...

தொண்டை கமறல் அல்லது சளி இருந்தால் நான் பண்ணும் கை வைத்தியம் இது தான்.
காலை பாலில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 நாட்கள் குடித்தால் போதும்,சளி காணாமல் போய்விடும்.

ஜே கே | J K said...

//விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்//

காயம் என்று சொல்லியுள்ளீர்களே அது என்ன??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க துளசி , நாலு போதுமா?
சட்னி சாம்பார் சேர்த்தா ? தனியாவா?

வடுவூர்குமார் என்னோட சிறுமுயற்சி பதிவுல பின்னூட்டம் போட முடியலன்னு சொல்லி இருக்கீங்களே
கொஞ்சம் அங்கயும் வந்து திரும்ப முயற்சி செய்துட்டு சொல்லுங்களேன்.சரியாயிடுச்சா இல்லயான்னு.. உங்க வைத்தியம் நல்ல முறை நாங்களும் செய்வோம்.அதோட மிளகுத்தூள் சேருங்கள் இன்னும் நல்லது.


வாங்க சாரல் பெருங்காயத்தைத் தான் காயம்
என்று குறிப்பிட்டேன்.

Anonymous said...

மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி.

நானானி said...

மிகவும் உபயோகமான பதிவு. சின்னவயதில் எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியம்மா வருவார்கள். அருமையாக கதை சொல்வார்கள். ஆர்வமாக கேட்போம்.இடையிடையே
உபயோகமான தமிழ் மருத்துவக்குறிப்புகளும் சொல்வார்கள்.
அந்த வயதுக்கு அவற்றைக் குறிப்பெடுக்கத்தோன்றவில்லை. ஆம்! வாவியை தொலைத்துதான் விட்டோம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானி நன்றி.

நானானி ..இன்னும் இருக்கும் பலரிடம் கேட்டு த் தெரிந்து குறிப்புகளை இப்படி பதிவாக்குங்கள்.
எல்லாருக்கும் உபயோகப்படட்டும்.

Anonymous said...

நல்ல பதிவு..

காட்டாறு said...

நம்மூட்ல இன்னைக்கும் பாட்டி வைத்தியம் தான். சளியா, தலைவலியா, இருமலா, பித்தமா...... எல்லாத்துக்கும் கை மருந்து தான். அதுக்காக நான் பாட்டியெல்லாம் இல்லையப்பா.... சாவியை பத்திரமாக வைத்திருப்பவள். ;-)

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines