breakfastlunchdinner

Saturday, March 31, 2007

இஞ்சி மொரபா

தாத்தா வீட்டுக்கு போனப்போ சும்மா இருக்க முடியாமல் கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் காலேஜ் ல ஒரு நாலு நாள் வகுப்பு எடுத்தாங்க அதுல சேர்ந்து ஜாம் ஜூஸ் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு முறை எல்லாம் செய்தேன். அவ்வளவு தான். நோட்ட எங்கயோ வச்சிட்டேன் எடுத்துப்பார்த்தா இப்ப அதுல தண்ணி பட்டு நஞ்சு போய் அங்க இங்க எழுத்தெல்லாம் மறைஞ்சுட்டு இருக்கு.

இங்க எழுதன மாதிரி யும் இருக்கும் நினைவுபடுத்திக்கிட்ட மாதிரியும் இருக்கும் இல்லயா ? இதோ உங்களுக்காக இஞ்சி மரபா செய்வது எப்படி?

இஞ்சி 100 கிராம் .{ நானும் சித்தியும் உழவர் சந்தைக்கே போய் நல்ல இஞ்சியா பார்த்து வாங்கிவந்து செய்தமாக்கும் அன்னைக்கு}

சர்க்கரை 400 கிராம்

சிட்ரிக் அமிலம் {இது எவ்வளவு போடனும்ன்னு எழுதன இடம் சரியா தெரியல நியாபகமும் இல்ல பாத்து போட்டுக்குங்க ஒரு ஸ்பூனா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.}

நார் இல்லாத இஞ்சியாக எடுத்து , தோலை சீவி அதை துருவி வச்சுக்கோங்க. அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைங்க.

அப்புறமா அதை மிக்ஸ்யில் போட்டு அரைச்சுக் கோங்க.

சர்க்கரையில் சிறிதளவு தன்ணீர் ஊற்றி சிட்ரிக் அமிலம் சேர்த்து கம்பி
பதம் வரும் வரை காய்ச்சி தயாரித்து வைத்து இருக்கும் இஞ்சிக் கூழை சேர்த்து
நன்கு கிளறவும். பதமா வரும் {இந்த பதமெல்லாம் ஏற்கனவே ஸ்வீட் செய்து பார்த்து இருந்தீங்கன்னா புரிஞ்சுடும்} நெய் தடவிய தட்டில் பரப்பி கத்தியால பர்பியாக வெட்டி வைங்க.

கன்னி ராசி படத்துல கவுண்டமணி சொல்வாரே "டேய் உங்கக்காக்கு சூப் வைக்க தெரியும்ங்கறதே நீ வந்தப்பரம் தான் தெரியும் " அப்படின்னு மச்சான் பிரபு கிட்ட அது மாதிரி ...
எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு என் வீட்டுக்காரருக்கு தெரியாது. பாவம் அவங்களுக்கு இஞ்சி மரப்பான்னா ரொம்ப பிடிக்கும் . நானும் செய்யணும் ஒரு தடவை இந்த பதிவ படிச்சுட்டு .....

5 comments:

நாமக்கல் சிபி said...

//எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு என் வீட்டுக்காரருக்கு தெரியாது. பாவம் அவங்களுக்கு இஞ்சி மரப்பான்னா ரொம்ப பிடிக்கும் . நானும் செய்யணும் ஒரு தடவை இந்த பதிவ படிச்சுட்டு //

தெரிஞ்சுதுனா அதை விடப் பாவம்!

100 கிராம் இஞ்சிக்காக உழவர் சந்தை போனீங்களா? சபாஷ்!

இஞ்சி முரபா நல்லாத்தான் இருக்கும் போல கீதே!

Anonymous said...

அப்படியே பூண்டு மொரபா, சீரக மொரபா முயற்சி செய்யவும்!

பங்காளி... said...

இஞ்சி தெரியுது....மொரபான்னா என்ன அர்த்தம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\100 கிராம் இஞ்சிக்காக உழவர் சந்தை போனீங்களா? சபாஷ்!//

செய்யமாட்டேன் செஞ்சா திருந்த செய்வேன்.

\\அப்படியே பூண்டு மொரபா, சீரக மொரபா முயற்சி செய்யவும்! //

கண்டிப்பாக அப்படி எதும் க்ளாஸ்
அட்டெண்ட் பண்ணி தெரிஞ்சா
பகிர்ந்துக்கறேன். பூண்டு ஊறுகாய் கூட சொல்லிக்கொடுத்தாங்க அங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இஞ்சி தெரியுது....மொரபான்னா என்ன அர்த்தம்? //

மொரபான்னா ப்ரசெர்வ் செஞ்சதுன்னு அர்த்தம்.
sugar சேர்த்து கொதிக்க வச்சு ரொம்ப நாள் உபயோகிக்க செய்யறதால..மொரபா எந்த மொழின்னு தெரியல.
பெர்ஷியன் குக் புக்குல கோல் மொரபான்னா (Flower Preserves)
அப்படின்னு இருக்கு.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines