breakfastlunchdinner

Thursday, September 20, 2007

காரக்குழம்பு

தேவை:

கடுகு: 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்
வெந்தயம்: 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்:100கி
புளி: எலுமிச்சை அளவு
எண்ணெய் :100மிலி
உப்பு: தேவைக்கு...

செய்முறை:

முதலில் மூன்று டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.

குறிப்பு: இந்தக் காரக் குழம்பை மாதத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறை செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். உலகளாவ பரந்து கிடக்கும் சாப்ட்வேர் பிரம்மச்சாரிகள், பேச்சிலர்கள் இந்தக் குழம்பை செய்து மகிழலாம். பச்சரிசி புழுங்கலரிசி சாதங்களுக்கு நல்லாவே சேரும்.

துணைக்குறிப்பு: கடலை மடித்த காகிதமொன்றில் கிடைத்த குறிப்பு இது. எந்தப் பத்திரிகைக் காகிதம் என்று அறிய இயலவில்லை. மேலே உள்ள குறிப்பும் அதில் உள்ளதுதான்.

5 comments:

Anonymous said...

கூடவே ஏதாவது வத்தலோ கத்திரிக்காயோ கூட சேத்துக்கலாம். நல்லா இருக்கும்.

✪சிந்தாநதி said...

சின்ன அம்மிணி நன்றி...

இதில் வெந்தயத்துக்குப் பதிலாக மிளகுத்தூள் மற்றும் பூண்டு சேர்த்து கொத்துமல்லித் தழையும் இட்டு விட்டால் புளிரசம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் வலைப்பூவிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன். படித்துக்கொண்டு இருக்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

cheena (சீனா) said...

//கூடவே ஏதாவது வத்தலோ கத்திரிக்காயோ கூட சேத்துக்கலாம். நல்லா இருக்கும்.//

ரிப்பீட்டேய்

ஏங்க பிரம்மச்சாரிங்க ஏற்கனவே பாவம் - அதுலே காய்கறி இல்லாமலேயே - கொழம்பா - பாவமுங்க

சேதுக்கரசி said...

கிட்டத்தட்ட இந்த மாதிரிக் குழம்பை எங்க ஊர்ப்பக்கம் "சும்மா குழம்பு"ன்னு சொல்வாங்க. காய்கறியில்லாமப் பண்றதால "சும்மா" குழம்புன்னு சொல்றது. உப்புமாவுக்கு பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines