நல்ல மட்டன் லிவர் 250 கிராம்.
சின்ன வெங்காயம் ஒரு கப்.
வெங்காயத்தாள் (வெங்காயச் செடியின் இலைச்சுருள்) நறுக்கியது அரைகப்.
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு.
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சம் பழம், எண்ணெய்.
செய்முறை:
எண்ணெய் சூடானதும் முதலில் வெங்காயத்தை வதக்குங்க.
வெங்காயத்தாள் இட்டு பச்சை வாசனை மாறி வரும் வரை வதக்கணும்.
கொத்துமல்லித் தழை இட்டு வதக்கவும்
துண்டுகளாக நறுக்கிய ஈரல் துண்டுகளை அதில் இட்டு நன்றாக கிளறுங்க.
எலுமிச்சை சாறு சேர்த்துடுங்க.
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கணும்.
ஈரல் வேகும் வரை எண்ணெயிலேயே வதக்க வேண்டும்.
(எண்ணெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் முதலில் தண்ணீரில் பாதி வேகும் வரை வேக வைத்து வடிகட்டிச் சேர்க்கலாம்.)
இறுதியாக மிளகுத்தூள் இட்டு பிரட்டி...
வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
குறிப்பு: 1. ஈரல் பொரியலுக்கு வெங்காயத்தாள் தனியான சுவை தரும். அது கிடைக்காதவர்கள் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய தக்காளியை ஈரம் போக சுருள வதக்கிய பின்பே ஈரல் சேர்க்க வேண்டும்.
2. வழக்கமான இறைச்சி வாசனை தேவை எனில் முதலில் பட்டை, கிராம்பு தாளித்து தொடங்கலாம். அல்லது சிறிதளவு கரம் மசாலா சேர்க்கலாம். (வெங்காயத்தாள் சேர்த்து செய்யும் போது இவை தேவை இல்லை)
-oOo-
நேயர் விருப்பம்: சர்வேசன்.
படம் சேர்க்க வழியில்லை. செய்து பார்த்து படம் போடுங்க :)
5 comments:
வரும் ஞாயிறு செய்து பார்த்து, படம் காட்டறேன் :)
நன்றி! படிக்கும்போது சாப்பிடணும்போல இழுக்குது.
இரத்தப் பொரியல்..செய்ய சொல்லித் தாங்ல..தீபாவளி வேற வருது...தீபாவளி அன்னிக்கு. விடிய காலையில அத சாப்பிடுவோம்... இது கொஞ்சம்..புதுசா இருக்கு...செஞ்சு பாத்து சொல்லுறேன்..
அம்பி,
ஈரல் சாப்பிடரத கொறச்சுக்கோடா.
ஜாஸ்தி கொலஸ்ட்ராலோல்யோ.
உங்கள் சமைத்து பார்க்காத சமையல் குறிப்பு நல்லா தான் இருக்கு. ஆனாலும் மாமிசம் உண்பதை விட , இப்படி விலங்குகளின் தனிப்பட்ட உறுப்புகளினை சமைத்து உண்பது அதிகம் கெடுதல், ஈரல் , கிட்னி , மூளை என வருத்து சாப்பிட்டால் நம் உடல் தான் கெடும், குறிப்பாக சிறு நீரக பாதிப்புக்குள்ளானவர்கள் இதனை எல்லாம் சாப்பிடவே கூடாது.
அசைவ உணவுகளில் யாவருக்கும் ஏற்றது , கடல் உணவுகள், பின்னர் , ஓரளவு கோழி , மற்றவை எல்லாம் தொந்தரவு தான்!
நல்லதுங்க. இந்தப் பதிவைப் பார்க்காமல் ஒரு பின்னூட்டம் போட்டுடேனுங்க..
மன்னிச்சுடுங்க..
சரிதானுங்களே.
இதை இப்போதே செஞ்சு ஒரு கை / ஒரு வாய் பார்த்துப் போட்டுடுறேனுங்க.
சரிதானுங்களே
Post a Comment