breakfastlunchdinner

Tuesday, July 15, 2008

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்



பூண்டு மிக நல்லது. அரு மருந்து.

நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு
வகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்
சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடை
போதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரி
வீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.

விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பூச்சிக்கடி போன்ற எந்த விஷக்கடிக்கும் முதலில்
மிளகைத்தான் திங்கக் கொடுப்பார்கள்.

நாம் முதலில் பார்க்கப்போவது பூண்டு,மிளகு ரசம்.

செய்வது எளிது.

தேவையான சாமான்கள்:

4 பல் பூண்டு, தக்காளி 2, மிளகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/4 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன்,கடுகு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டு பல், மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில்
போட்டு பொடிக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து
சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
1 ஸ்பூன் சேர்த்து சூடானதும், கடுகுதாளித்து,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்
அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டை
சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை
சேர்த்தால் ரசம் ரெடி.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.



பூண்டு, மிளகுக் குழம்பு.




தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தக்காளி 1/4 கிலோ.
தேங்காய் துருவல் அல்லது கொப்பரைத்தூள் 1 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,
தனியாத்தூள் 1 ஸ்பூன்
ந.எ - 1 ஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டை உரித்து கொள்ளவும்.

சின்ன வெங்கயாத்தையும் நன்கு உரித்துக்கொள்ளவும்,

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து
அதில் மிளகு சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பிரட்டி
அடுப்பை அனைக்கும் முன் தேங்காய்த்துருவல்
சேர்த்து ஆற விட்டு மைய பேஸ்டாக
அரைத்துக்கொள்ளவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

குக்கரில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு, கறிவேப்பிலை தாளித்து
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்துவதக்கி,
அரைத்துவைத்துள்ள பேஸ்டையும் போட்டு,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 1 கிளாஸ்
தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வெயிட் போடவும்.

3 விசிலுக்கு பிறகு இறக்கி ஆற வைத்து
திறந்தால் கம கமக்கும் பூண்டு, மிளகுக்குழம்பு ரெடி.

13 comments:

நிஜமா நல்லவன் said...

ஆஹா பதிவை படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கே:)

மங்களூர் சிவா said...

பூண்டு ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

செஞ்சு சாப்பிட்டிடுங்க.

pudugaithendral said...

வாங்க சிவா,

வருகைக்கு நன்றி.

Unknown said...

பூண்டு ரசம் எனக்கும் பிடித்தமான ஒன்று.



முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''

இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கமகமக்குதே... வரும்போதே மணக்கவச்சிட்டீங்க போங்க..

பாக்கவும் ..மணமாவும் இருந்தாலே 50% வெற்றின்னு எங்க மாமனார் சொல்லுவாங்க..

cheena (சீனா) said...

எனக்கு ரசம் பிடிக்கும். அதிலும் பைன் ஆப்பிள்ரசம், மிளகு ரசம் பிடிக்கும் - இப்ப பூண்டும் சேருது - குடிச்சுப் பாத்துடுவோம்

துளசி கோபால் said...

ஆஹா......

பூண்டு படம் ஜோர்:-)

பூண்டு சம்பந்தப்பட்ட ஒரு சமாச்சாரத்தை விரைவில் எதிர்பாருங்கள் துளசி தளத்தில்.

ச்சும்மா ஒரு விளம்பரம்தான்:-))))

pudugaithendral said...

பூண்டு ரசம் எனக்கும் பிடித்தமான ஒன்று.

வாங்க புதுகைச் சாரல்.

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

கமகமக்குதே... வரும்போதே மணக்கவச்சிட்டீங்க போங்க..

ஆஹா நன்றி கயல்விழி.

pudugaithendral said...

இப்ப பூண்டும் சேருது - குடிச்சுப் பாத்துடுவோம்

நன்றி சீனா சார்.

pudugaithendral said...

வாங்க டீச்சர்.

விளம்பரம்னாலும் நாங்க பாடத்திற்கான விளம்பரமா எடுத்துக்கிட்டு வந்திடுவோம்ல.

ராமலக்ஷ்மி said...

சங்கட்டிக்கு இதையே செய்து பார்த்திடுறோம்.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines