breakfastlunchdinner

Friday, July 25, 2008

உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.



வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான்
சொல்லத் தேவையில்லை.

மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.


முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது
சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.

சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்
வாசனை ஊரைத் தூக்கும்.
(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்
பலர் விரும்ப மாட்டார்கள்.)

சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில பார்க்கலாம்:

ஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.


இது ரொம்ப சிம்பிள் முறை:


தேவையான சாமான்கள்:

உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்
கொள்ளவும்)

கசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.
(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்தி
கிடைக்கும்)

உப்பு, மஞ்சள் தூள், காரத்தூள் அல்லது கரம் மசாலா
தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பை பற்றவைத்து வாண்லியில் 1 ஸ்பூன்
எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு
உப்பு, மஞ்சள், காரம் சேர்த்து கிளறவும்.

கொஞ்சம் வதங்கியதும் இரக்கி வைத்து
கசூரி மேத்தி சேர்த்து வாணலி சூட்டிலேயே
பிரட்டவும்.

ஆலூ மேத்தி ரெடி.

விரும்பினால் தாளித்தபின் 2 தக்காளி
வெட்டி சேர்க்கலாம்.





மேத்தி பராத்தா:
நாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்
பிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்
கொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.

முக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்து
பிசைந்து இரு புறமும் எண்ணைய் விட்டு
சுட்டு எடுத்தால் மேத்தி பராத்தா ரெடி.

இதிலேயே தண்ணீருக்கு பதில் புளிக்காத
தயிர் சேர்த்து பிசைந்தால் மேதி தேப்லா.

( 4 நாள் வரை கெடாது)





வெந்தயக்கீரை சாம்பார்:

செய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய
என்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.

குழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.

சரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே!


குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1 கரண்டி தண்ணீர்
விட்டு அது கொதித்ததும் சுத்தம் செய்து வெட்டி
வைத்துள்ள வெந்தயக்கீரையை போடவும்.

கீரை முக்கால் பாகம் வெந்ததும் புளிக்கரைசல்
ஊற்றி கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி
சேர்த்து கொதிக்க விடவும்.

பொடி வாசனை போனதும் வேக வைத்துள்ள
பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

நல்லெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்போடு,
கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் கீறி
தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி
பரிமாறவும்.




நம் உடல் சூட்டை தடுக்கும் வெந்தயம்.

வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.

16 comments:

புதுகை.அப்துல்லா said...

//
வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.
//

அட அக்காவுக்கு கூட கவுஜ வருது!!!

மங்களூர் சிவா said...

நல்ல நல்ல செய்திகள் / விசயங்களை தேடி தருகிறீர்கள் மிக்க நன்றி.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

உடம்பு சூட்டை பெரும்பாலும் வாயில் வரும் ஹீட் பிளிஸ்டருக்கு சிறிது வெந்தயத்தை இரவு மோரில் ஊற வைத்து காலையில் மென்று சாப்பிட்டால் சரியாகும். நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி தினப்படி சமையலிலேயே இப்படி அடிக்கடி சேர்த்து வந்தால் சூடாவது ஒண்ணாவது...:)).நல்ல பதிவு நன்றி புதுகைத் தென்றல். கண்டிப்பா செய்து பார்ப்பேன்.

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

இதுதான் கவுஜையா!!!

:)

pudugaithendral said...

வாங்க சிவா,



நல்ல நல்ல செய்திகள் / விசயங்களை தேடி தருகிறீர்கள் மிக்க நன்றி.

ஏதோ நமக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குச் சொல்லலாமேன்னுதான்.



உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி.

நானானி said...

வெந்தயத்தின் மகிமையை மனசு
நொந்து போகாமல் அருமையாய், பொறுமையாய், விரும்பாதவர்களும்
விரும்பும் வகையில் எடுத்துக்காட்டியுள்ளீர்கள்!!புதுகைத்தென்றல்!!!

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாரம் ஒரு கீரை முறையில்
இந்த மாதிரி செய்யலாம்.

வித்தியாசமா செஞ்ச மாதிரியும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

செஞ்சு பார்த்துட்டு தனி மடல் அனுப்புங்க. :)

(ஆட்டோ வராதுன்னு நம்புவோமாக) :)))))

pudugaithendral said...

ஆஹா வாங்க நானானி,

உங்களின் வார்த்தைகள் மனதுக்கு ஊட்டமளிக்கிறது.

நன்றி.

கானா பிரபா said...

நாங்க தண்ணி இல்லாக் காட்டில் இருக்கோம், இப்படியா பண்றது, அழுதுடுவேன் ஆமா ;-(

pudugaithendral said...

நாங்க தண்ணி இல்லாக் காட்டில் இருக்கோம், இப்படியா பண்றது, அழுதுடுவேன் ஆமா ;-(

கண்ணத் துடைச்சிக்கோங ப்ரபா.

அழப்டாது. :)

(பக்கத்துல தங்ஸ் (அதான் தங்கமணி) இருக்காங்கள்ல? :)

வல்லிசிம்ஹன் said...

வெந்தியம் சர்க்கரை நோய்க்கும் அரு மருந்து.

நல்ல பதிவு தென்றல். நன்றி.

pudugaithendral said...

வாங்க வல்லி சிம்ஹன் அம்மா,

வாழ்த்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.

நிஜமா நல்லவன் said...

///

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
//
வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.
//

அட அக்காவுக்கு கூட கவுஜ வருது!!!

///


ரிப்பீட்டேய்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உணவுப்பொருளின் சுவை மட்டுமில்லாம அதன் குணங்களையும் சொல்லி எழுதுவது மிகப்பயனுள்ள விசயம். ...புதுகைத்தென்றல்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

உணவுப்பொருளின் சுவை மட்டுமில்லாம அதன் குணங்களையும் சொல்லி எழுதுவது மிகப்பயனுள்ள விசயம்//

ஆமாங்க எங்க வீட்டுல பெரியவங்க எனக்கு இது பிடிக்காதுன்னு சொன்னா விடமாட்டாங்க. அதோட நன்மையைச் சொல்லி சாப்பிட வெச்சிடுவாங்க.

பாகற்காயயே நாங்க கருக்கு முருக்குன்னு சாப்பிடறவங்க ஆச்சே.

:)

வருகைக்கு நன்றி

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines