வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது
விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?
மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.
இதை இரண்டு விதமாக செய்யலாம்.
INGREDIENTS தேவையான பொருட்கள்: அரிசி : 2 கப் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப் சீரகம், மிளகு 1 ஸ்பூன். மிளகாய் வற்றல் : 5 பட்டியல் |
மேற்சொன்ன அனைத்தையும் ஊற வைத்து கரகரவென்
அரைத்து எண்ணையில் கரண்டியால் எடுத்து ஊற்றி
ப்ரவுன் நிறத்தில் பொறித்து எடுக்கலாம்.
எண்ணையில் பொறிக்க பயமாக இருக்கும்
கலோரி கான்சியஸ் காரர்கள் இவ்வாறு செய்யலாம்.
கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில்
டிரையாக ரவைபோல் பொடித்துக் கொள்ளவும்.
அடி கணமான பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி
கடுகு, கறிவேப்பிலை தாளித்து 1 பங்கு ரவைக்கு
2 பங்கு தண்ணீர் விட்டு கொதித்ததும் உப்பு
சேர்த்து, பொடித்து வைத்திருக்கும் ரவையையும்
சேர்த்து உப்புமாவாக கிளறவும்.10 நிமிடம்
சிம்மில் வைத்து வெந்ததும் அடுப்பை அணைத்து
விடவும்.
செய்து வைத்திருக்கும் உப்புமாவை உருண்டைகளாக
செய்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து உருட்டி வைத்திருக்கும்
உருண்டைகளை வட்டமாகத்தட்டி, நடுவில் ஓட்டை
செய்து அதை வாணலியில் போட்டு, 1 ஸ்பூன்
எண்ணைய் எடுத்து நடுவில் கொஞ்சம், சுற்றி
கொஞ்சம் விட்டு மூடி வைக்கவும்.
பிறகு மறுபுறமும் திருப்பி மூடி வைக்கவும்.
சுட்டதும் சுடச்சுட சாப்பிடலாம்.
தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, கொத்சு
சாம்பார் எதுவும் ஓகே தான்.
11 comments:
அடை சந்திரவட்டம் குறையுதே.ஒரு நாள் உடுப்பிக்காரர் கொத்துமல்லி அடை இருக்கு சாப்பிடறீங்களான்னார்.கொடுங்கன்னதுக்கு முழுநிலவு வட்டமா,தங்க கலருல கொண்டு வந்தார்.
எனக்கு ரெண்டு தவல அடை கொடுத்துருங்கக்கா!
என்ன ரெண்டே ரெண்டு தான் தட்டுல இருக்கா? இன்னொரு வாட்டி சுடுங்க! இந்த முறை ரவுண்ட் ஷேப் இன்னும் நல்லா வரணும்! ஆமா! :)
வெந்தது பாதி வேகாதது மீதியுமா இங்க சாப்பிட்டுகிட்டு இருக்கேன்....நீங்க என்னன்னா ஏதோதோ பேர சொல்லி இப்படி ஏங்க வைக்குறீங்களே....சரி சரி....அப்படியே எனக்கும் ரெண்டு .....தவல அடை பார்சல் பண்ணிடுங்க:)
ம்ம், இங்க அவனவன் காஞ்சி போன பிஸ்ஸாவும், மசாலாவே இல்லாத மாட்டுக்கறியும் சாப்ட்டு நொந்து போயிருக்கான். நீங்க என்னடான்னா, மதுர, தவல அடைன்னு பொகய வுடுறீங்களே!
வாங்க ராஜ நடராஜன்,
சந்திரவட்டம் குறைஞ்சாலும் ருசியா இருக்குதான்னு தானுங்க பார்க்கணும்.
:)
வாங்க கே.ஆர்.எஸ்.
ஷேப் சரியா செஞ்சு போடுறேன். ஆனா ஒரு கண்டீஷன் அதை விள்ளாம அப்படியே சாப்பிடணும்.
:))))))))))))))))))))))
செஞ்ச தவலை அடையில் எனக்கு மிச்சமே இல்லைன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன் நீங்க ரவுண்டா இல்ல சந்திர வட்டம் குறையுதுங்கரீங்களே!!!
:(
எல்லாத்தையும் பார்ஸல் அனுப்பிகிட்டு இருந்தா விடிஞ்சிடும்,
ஆஹா அதுசரி,
நீங்க சொல்றதும் சரிதான்.
தவலை எங்கப்பா நானானி:)
அதில மாவைப் போட்டு நாலு கரண்டி நெய்யும் எண்ணையும் கலந்து ஊஊஊஊஊஊஊஉற்றி,அப்டியேஎ முறு முறுனு எடுத்தா,ஸ்ஸ்ஸ்ஸ் எவ்ளோ நல்லா இருக்கும்:)
அது எனக்கா டிரைனுக்கும் உங்களுக்கும் அப்படி ஓரு பந்தம்? :)
Post a Comment