மைக்ரோ வேவில் சமைப்பது சுலபம்.
( மைக்ரோ வேவ் பாத்திரம் தேய்ப்பதும் தான் :))))
மைக்ரோ வேவ்
விக்கிப்பீடியா தகவல்களுக்கு.
மைக்ரோ வேவ் எப்படி வேலை செய்கிறது?
போன்ற மற்ற தகவல்களுக்கு.
மைக்ரோ வேவில் சூட வைப்பது மட்டுமல்ல
சூப்பரா நமது இந்திய சமையலும் செய்யலாம்.
(துளசி டீச்சர் பதிவுகளில் பார்த்திருப்பீங்க)
எனக்குத் தெரிந்த சில மைக்ரோ வேவ்
சமையல் குறிப்புகளை உங்களுக்குத்
தரப்போகிறேன்.
இனிப்போடு ஆரம்பிக்கலாமா?
தேங்காய் பர்பி:
INGREDIENTS பட்டியல் தேங்காயத் துருவல் - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் 1 ஸ்பூன், ஏலப்பொடி கொஞ்சம். |
மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தேங்காய்த் துருவல்,
சர்க்கரை, நெய் கலந்து 3 நிமிடம் வைக்கவும்.
3 நிமிடத்திற்கு பிறகு எடுத்து கொஞ்சம் ஏலப்பொடி
சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.
எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள்
போட்டால் பர்பி ரெடி.
( வைக்கும் நேரம் அவனின் அளவைப் பொறுத்தும்
வாட்ஸைப் பொறுத்தும் மாறும் )
9 comments:
Thanks dear dude..
I like this post from TamilNenjam.
ஓ நன்றி புதுகைத்தென்றல்.. ஓவன் வச்சுட்டு செய்ய குறிப்பில்லையேன்னு இருந்தேன்.. இன்னும் ஈஸியான பல ரெசிப்பி உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்..
nandri tamil nenjam.
வாங்க கயல்விழி,
ரெசிப்பி உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்//
வேற வேலை போட்டுடுவோம்.
ஆஹா...ஆஹா...எனக்கு ரொம்ப பிடிச்சது....ஆனா நானே செய்ற அளவுக்கு பொறுமை இல்ல....:)
அவன்ல பொறுமையா நீங்களே
செஞ்சு சாப்பிடலாம் நிஜமா நல்லவன்.
இதே பர்பி நெய்க்கு பதில் வெண்ணை வெய்து செய்ய முடியுமா ? செய்தால் எந்த அளவுக்கு நன்றாக வரும் ?
nalla oru receipie kuduthinga but oven temp. and time kudukalai
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
Post a Comment