breakfastlunchdinner

Tuesday, September 2, 2008

மைக்ரோ அவனில் பொரியல் செய்வது எப்படி?

காலை நேர அவசர சமையலுக்கு ஆபத்பாந்தவனாய்
கை கொடுப்பது அவன் (மைக்ரோ அவனைச் சொன்னேன்)
தான்.







பீன்ஸ் பொரியல் செய்வது எப்படின்னு பார்ப்போம்.
தேவையான சாமான்கள் நாம் சாதாரணமாக
பீன்ஸ் பொரியலுக்கு உபயோகிக்கும் சாமான்கள் தான்.

பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

மைக்ரோ வேவ் பாத்திரத்தில் கடுகு, உளுத்தம்பருப்பு,
மிளகாய் தாளித்து வெளியே எடுத்து நறுக்கிவைத்திருக்கும்
பீன்ஸை சேர்த்து பிரட்டி 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து
4 நிமிடங்கள் வைக்கவும்.

எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய்த்துருவல்
சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வைத்தால்
பொரியல் ரெடி.




பீன்ஸ் பொரியல் மாதிரி தான் பீட் ரூட் பொரியலும்.

(மைக்ரோ வேவில் காய்களை வேகவைப்பதால்
சத்து வீணாகாமல் கிடைக்கிறது. குக்கரில்
வேகவைத்து தண்ணீரை கொட்டிவிடுகிறோம்.
இங்கே குறைவான தண்ணீர், சத்தும் அப்படியே
கிடைக்கிறது.)


உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து அவதிப்பட
தேவையில்லை.

தோலை சீவி வேண்டிய சைஸில் கட் செய்து
காரம், மஞ்சள், உப்பு கலந்து அவனில் வைத்தால்
5 நிமிடத்தில் உருளை வறுவல் ரெடி.


செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உருளை வறுவல் செய்துடறேன் இன்றைக்கே.. :)

pudugaithendral said...

இன்றைக்கே.. :)


நன்றே செய் அதுவும் இன்றே செய்னு பாலிசி வெச்சிருக்கீங்க போல.

ஆல் தி பெஸ்ட்.

ஆயில்யன் said...

மைக்ரோ அவன் இல்லாததால நான் நார்மலா செய்ய டிரைப்பண்ணுறேன்!:))))))

கானா பிரபா said...

மைக்ரோ அவள் இல்லாததால நான் நார்மலா செய்ய டிரைப்பண்ணுறேன்!:))))))

Anonymous said...

//வேண்டிய சைஸில் கட் செய்து//
அது என்ன் 'கட் செய்து'? 'வெட்டி' என்றே அழகாய்ச் சொல்லலாமே?

Anonymous said...

ஆகா...நல்ல யோசனை..

வடுவூர் குமார் said...

கடுகு,உளுத்தம்பருப்பு & மிளகாய் - மைக்ரோ ஓவனில் தாளிக்க முடியாதா?
:-)) வேலை சீக்கிரம் முடியும் அல்லவா?

pudugaithendral said...

மைக்ரோ அவன் இல்லாததால நான் நார்மலா செய்ய டிரைப்பண்ணுறேன்!:))))))

ஓ கே.

pudugaithendral said...

மைக்ரோ அவள்//

அப்படி ஒன்று இருக்கா என்ன பிரபா?

இதெல்லாம் டூ மச்

pudugaithendral said...

அழகாய்ச் சொல்லலாமே?


சொல்லாம் அனானி, தவறில்லை.

pudugaithendral said...

வாங்க தூயா,

செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.

pudugaithendral said...

கடுகு,உளுத்தம்பருப்பு & மிளகாய் - மைக்ரோ ஓவனில் தாளிக்க முடியாதா?//

தாராளமாக தாளிக்கலாம்.

தாளிக்க வேண்டிய சாமன்கள் + எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் வைக்க வேண்டும்.
(கொஞ்சம் விட்டாலும் கருகிவிடும் அபாயம் இருக்குங்க)

தாளிக்கும் போது அந்த பாத்திரம் மூடப்படவேண்டும். கண்ணாடி பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் மட்டுமே சமைக்கவும்.

கண்ணாடி மூடி இல்லாத பவுலாக இருந்தால் கிளிங் ராப் கொண்டு சுற்றி தாளிக்கலாம்.

Anonymous said...

ரொம்ப ரொம்ப நன்றிங்கோ.
நானு வீட்ல தட்டத்தனியா இருந்து ஒரு மைக்றோவேவ்வ வாங்கி வச்சு நெட்ல பாத்து பாத்து சின்ன சின்ன வேலை பண்ணி பாத்தேன். ஆனா அதுல அவங்க சொல்லிருக்கற சாமான்கள நம்ம ஊர்ல எப்படி சொல்லுறாங்கனு தெரியாம குத்துமதிப்பா வாங்கி சமச்சு குப்பைல கொட்டியதுதா மிச்சம்.

நீங்கயாவது தமிழ்ழ போட்டு ஹெல்ப் பண்ணுங்க.

pudugaithendral said...

தமிழ்ழ போட்டு ஹெல்ப் பண்ணுங்க//

கவலையே படாதீங்க. எனக்குத் தெரிந்தவற்றை கண்டிப்பாய் அழகு தமிழில் போடுவேன்.

குடுகுடுப்பை said...

நல்ல யோசனை, கருகல் வாசனை இல்லாமல் பொறியல்

Joe said...

செஞ்சு பாத்திட்டு சொல்றேன்.

புகைப்படங்கள் அருமையா எடுத்திருக்கீங்க.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines