ருசியும் சூப்பராக இருக்கும்.
பருப்பை அவனில் வைத்தால் குறைந்தது 20 நிமிடம்
ஆகும். கரண்ட் வேஸ்ட். குக்கரில் வேகவைத்துக்
கொள்ளவும்.
எலுமிச்சை அளவு புளி 2 டம்பளர் நீரில் ஊற வைத்து
கறைத்து வைத்துக்கொள்ளவும்.
சாம்பார் பொடி 1 1/2 ஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
ந.எ. 1 ஸ்பூன் (தாளிக்க)
வெங்காயம் - 1 நீள் வாக்கில் அரிந்தது.
a href="http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/SON6wohL9CI/AAAAAAAABI4/HuVVrMBeC8A/s1600-h/sambhar.bmp">

செய்முறை:
மைக்ரோ அவன் பாத்திரத்தில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
போட்டு மூடி 2 நிமிடம் வைக்கவும்.
தாளித்து முடிந்ததும் வெளியே எடுத்து
கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து
பிரட்டி 3 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து உடன் சாம்பார் பொடி,
உப்பு சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர்
சேர்த்து அவனில் 5 நிமிடம் வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து
வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்து
மேலும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவை, மணம் மிக்க சாம்பார் ரெடி.
காய் சேர்க்க விரும்பினால்:
தேவையான காய்களை 1 ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கொஞ்சம் உப்பு
சேர்த்து பிசிறி 2 நிமிடம் வைக்கவும்.
சாம்பாருக்கு பருப்பு சேர்க்கும் பொழுது
வேகவைத்து வைத்திருக்கும் காய்கறியையும்
சேர்த்து கலக்கி வைத்தால் போதும்.







5 comments:
சாம்பார் ருசியா இருக்குங்கறீங்களா..? இதே மாதிரியே காபியும் ஓவனில் சூடு செய்தா சுவையா இருக்கும்ன்னு சொல்றாங்களே உண்மையா..?
சாம்பார் ருசியா இருக்குங்கறீங்களா..? //
ருசி மட்டுமல்ல நல்ல மணத்தோடையும் இருக்கும்.
காபியும் ஓவனில் சூடு செய்தா சுவையா இருக்கும்ன்னு சொல்றாங்களே உண்மையா..?//
அவனில் சூடு செய்தா சுவை வராது.
காபி அவனிலேயே கலக்கலாம்.
அதைப் பத்தி ஒரு பதிவு போடுறேன் இருங்க.
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to
valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
Let's show your thoughts to the whole world!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment