breakfastlunchdinner

Thursday, September 25, 2008

மைக்ரோ அவனில் வெங்காயச் சட்னி.



இட்லி,தோசைக்கு இணையான ஜோடி தக்காளி
வெங்காயச் சட்னிதான். தேங்காய்ச் சட்னியுடன்
ஒப்பிடும் பொழுது இதில் கொழுப்புச் சத்து குறைவு.
இதனாலேயெ டயட்டில் இருப்பவர்களும் இதை
விரும்புகிறார்கள்.


காலை அவசரத்தில் தக்காளி, வெங்காயம்
வதக்கிக்கொண்டு இருக்க நேரம் இருக்காது.
அப்போது மைக்ரோ அவனில் செய்வேன்.
அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


INGREDIENTS பட்டியல் பெரிய வெங்காயம் - 2 ( நீளவாக்கிலோ, பொடியாகவோ அரிந்து கொள்ளவும்), தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 1/2 ஸ்பூன்,


மேற்சொன்னவை எல்லாவற்றையும் கலந்து
மைக்ரோ அவன் பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்கள்
வைத்தால் நன்கு வதங்கிவிடும். நடுவில் ஒரு
முறை வெளியே எடுத்து திருப்பி விடவும்.
சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அடித்தால்
சட்னி ரெடி.

உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யும் சட்னிக்கு கூட
முதலில் எண்ணெய் விட்டு அதில் உ.பருப்பு சேர்த்து
2 நிமிடம் வைக்கவும். பிறகு தக்காளி வெங்காயம்,
மிளகாய் சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வைத்து
ஆறியதும் அரைக்கலாம்.

சுலபாமனது. செய்து பார்த்து சொல்லுங்கள்>

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாவ் சரியாச்சொன்னீங்க காலையில் இருப்பு சட்டியில் வதக்கிட்டிருக்கறது.. நன்றி.

pudugaithendral said...

வாங்க முத்துலெட்சுமி,

காலை நேர அவசரம் எல்லார் வீட்டிலும் சகஜமாச்சே. :))

Shankar said...

மிக்க நன்றி. உங்கள் குறிப்புகள் மிகவும் உதவியாக இருந்தது. பெற்றொரை விட்டு வேறு நாடுகளின் இருக்கும் என் போன்ற சைவர்களுக்கு(தேசி உணவுபிரியர்களுக்கும் தான்) நல்ல உதவிதான். நன்றி.

-ஷங்கர்-

pudugaithendral said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சங்கர். :)

தெய்வசுகந்தி said...

எனக்கு பிடிச்ச சட்னி இது. ஆனா மைக்ரோவேவ்ல ட்ரை பண்ணதில்ல. இதுல கொஞ்சம் கொத்தமல்லி இலையும் சேர்த்து அரைத்தால் இன்னும் நல்லா இருக்கும்.

pudugaithendral said...

கொத்துமல்லி சேர்த்தா நல்லா இருக்கும் என்ற தகவலை தந்தற்கு மிக்க நன்றி தெய்வ சுகந்தி.

Subash said...

மிக்க நன்றி
தொடர்ந்து மைக்றோவேவ் குக்கிங் தந்தா எனக்கும் கொழுது பொகும். வீட்ல நானும் Micro Oven எம் மட்டும் தனியா இருக்கோம்
:(

Unknown said...

Hi,

Realy it comes very nice.

thanks fr the recipe.

Anonymous said...

Useful recipe!!!
:)

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines