breakfastlunchdinner

Wednesday, October 1, 2008

மைக்ரோ அவனில் காபி

மைக்ரோ அவனில் காபி சூடு செய்தால் சுவையா
இருக்குமா என்று முத்துலெட்சுமி கேட்டிருந்தார்.
அவருக்காக இந்தப் பதிவு.

மைக்ரோ அவனில் காபி கலந்தால் அதன்
சுவையே வேறு. நல்ல மணமாகவும் இருக்கும்.


ஃபில்டர் காபி என்ற பதிவுக்கு.


இன்ஸ்டண்ட் காபி பொடியில் காபி கலக்க:

முதலில் தேவையான பொடியை போட்டு
1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து
அவனில் 40 செகண்ட்ஸ்
வைக்கவும்.

பிறகு சர்க்கரை, பால் சேர்த்து கலந்து
மேலும் 20 நொடிகள்
வைக்கவும்.

1 நிமிடத்தில் காபி ரெடி. வெளியே
எடுக்கும் போதே வாசனை ஊரைக்கூட்டும்.



டிகாஷனில் காபி மைக்ரோ அவனில்.

டிகாஷன், சர்க்கரை, பால் இவைகளை கப்பில்
ஊற்றி கலந்து 1 நிமிடம் வைத்து எடுத்தால்
சுடச்சுட காபி ரெடி.

(முன்பே சொல்லியிருப்பது போல் திரவ பதார்த்தங்களை
வெளியே எடுக்கும் போது முகத்தை அருகில் கொண்டு
செல்லாதீர்கள்)

14 comments:

துளசி கோபால் said...

கயலு,
நம்ம செய்முறை இதோ:

ஒரு அரைக் கப் பால் & அரைக்கப் தண்ணீர் சேர்த்து மைக்ரோஅவனில் வச்சுக் கொதிக்க விடுங்க. ரெண்டு நிமிஷம் போதும். பொங்கிவரும்போது கவனிக்கணும். இல்லேன்னா அவந்தட்டைத் துடைக்கும் கூடுதல் வேலை வந்துரும்.

இன்ஸ்டன்ட் காஃபிப் பொடி முக்கால் ஸ்பூன் சக்கரை அவரவர் சுவைக்கு ஒரு கப்பில் போட்டு சூடான பால்த்தண்ணியை அதுலே விட்டால் காஃபி ரெடி!

Anonymous said...

Well, have a easy coffee and have cancer

ரிஷி (கடைசி பக்கம்) said...

I tried both method and found that Thulasi Gopal's method is working and nice taste.

Try it

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரவி ரொம்ப சீரியஸா போட்டிருக்காரே பின்னூட்டம்..

எப்பவாவது குடிச்சாலும் கேன்சர் வருமா ரவி.. ஏன்னா நாங்க கரெண்ட் இருக்கற நேரத்துல தானே ஓவன் போட முடியும்..:)
நன்றி புதுகைத்தென்றல்.

ஜோசப் பால்ராஜ் said...

அக்கா,
இந்த ஜெகதீசன் அடிக்கடி சமையல் குறிப்பு போடுறதால நானும் ஒரு சமையல் குறிப்பு போடலாம்னு இருந்தேன். எனக்கு தெரிஞ்சது இது ஒன்னுதான் அதையும் அடிச்சு காலிசெஞ்சுட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

எனக்கு தெரிஞ்சது இது ஒன்னுதான் அதையும் அடிச்சு காலிசெஞ்சுட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அழப்டாது. டீ போடுவது எப்படின்னு
பதிவு போடுங்களேன். அது இன்னுமும்
ஈசியா இருக்கும் :)

( டீபோடத் தெரியாட்டி,ஆன்லைனில் பார்க்கும்போது கேளுங்க சொல்லித்தர்றேன். அதை கட் காபி பேஸ்ட் செஞ்சு பதிவு போட்டுக்கலாம்0 :)
இந்த ரகசியம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். ஆமாம் அது ரொம்ப முக்கியம்.

நாநா said...

அடங்கொக்க மக்கா.. .விட்டா மைக்ரோ வேவ் அவனில் சுடு தண்ணி எப்படி வைப்பதுன்னு கூட் அஒரு பதிவு போடுவீங்களாட்டம் இருக்கு

Tech Shankar said...

நல்லதுங்க.. நீங்க சைவமா / அசைவமன்னு எனக்குத் தெரியாது.

ஆனால் நான் அசைவமுங்க.

அசைவம் சமைப்பது எப்படின்னு ஏதேனும் குறிப்புக் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகுமுங்க..

சரிதானுங்களே?

pudugaithendral said...

நான் சைவமுங்க.

நீங்க எதுக்கும் இங்கன ஒரு எட்டு போய் பாருங்களேன்.

http://thamizhcooking.blogspot.com/

விலெகா said...

பேஷ்,பேஷ் காப்பி ரொம்ப நல்லா இருக்கு:))

cheena (சீனா) said...

ஆமா - செய்முறை சரியா இருக்கு - ஆனா அவன் இல்லையே இங்கு - என்ன பண்றது ?

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

PNA Prasanna said...

Good stuff. Keep it up

http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com
http://pnaplinux.blogspot.com

jacsinzachariah said...

Borgata - Dr. MD
› › Casino › › Casino 공주 출장샵 Borgata has a great selection of casino games, including favorites like slots, blackjack, 과천 출장마사지 and table games. Find our full range of table games 평택 출장마사지 and 서울특별 출장마사지 live games in 구미 출장샵 our

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines