மஞ்சள் வெள்ளரிக்காயில் போடும் ஊறுகாய் இது.
(ஆந்திரா ஷ்பெஷல்னு சொல்லணுமா!!!))
மாங்காய் ஆவக்காயை விட வேலையும் குறைவு,
ஒரே நாளில் உபயோகிக்கவும் துவங்கலாம்.
அதான் இந்த ஊறுகாயின் ஷ்பெஷாலிட்டி.
செய்வது எப்படின்னு பாப்போம். தேவையான
பொருட்கள் இதோ:
INGREDIENTS பட்டியல் மஞ்சள் வெள்ளரிக்காய் -1, நல்லெண்ணெய் 1 கப், அதே கப்பில் அளந்த மிளகாய்த்தூள் 1 கப், 1 கப் உப்பு, கடுகுபொடி 1 கப் |

மஞ்சள் வெள்ளரிக்காயில் விதையை எடுத்துவிட்டு
படத்தில் காட்டியிருப்பது போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வெள்ளரிக்காய் துண்டங்களுடன் உப்பு,காரம், கடுகு பொடி,
எண்ணெய் எல்லாம் சேர்த்து கலக்கி பாட்டில் போட்டு வைக்கவும்.
அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))
கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.
(ஆந்திரா ஷ்பெஷல் உணவுகள் இந்த ப்ளாக்கில்
தொடரும் :)) )