மஞ்சள் வெள்ளரிக்காயில் போடும் ஊறுகாய் இது.
(ஆந்திரா ஷ்பெஷல்னு சொல்லணுமா!!!))
மாங்காய் ஆவக்காயை விட வேலையும் குறைவு,
ஒரே நாளில் உபயோகிக்கவும் துவங்கலாம்.
அதான் இந்த ஊறுகாயின் ஷ்பெஷாலிட்டி.
செய்வது எப்படின்னு பாப்போம். தேவையான
பொருட்கள் இதோ:
INGREDIENTS பட்டியல் மஞ்சள் வெள்ளரிக்காய் -1, நல்லெண்ணெய் 1 கப், அதே கப்பில் அளந்த மிளகாய்த்தூள் 1 கப், 1 கப் உப்பு, கடுகுபொடி 1 கப் |
மஞ்சள் வெள்ளரிக்காயில் விதையை எடுத்துவிட்டு
படத்தில் காட்டியிருப்பது போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வெள்ளரிக்காய் துண்டங்களுடன் உப்பு,காரம், கடுகு பொடி,
எண்ணெய் எல்லாம் சேர்த்து கலக்கி பாட்டில் போட்டு வைக்கவும்.
அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))
கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.
(ஆந்திரா ஷ்பெஷல் உணவுகள் இந்த ப்ளாக்கில்
தொடரும் :)) )
15 comments:
//கடுகு பொடி கிடைக்கவில்லை என்றால் கடுகை மிக்சியில்
சுற்றி நாமே பொடி செய்து கொள்ளலாம்.//
அடடா.. இது தெரியாம.. போச்சே..!!!
அவ்வ்வ்..
ருசியான பதிவு..!!
//சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))//
சாப்பிட்டால்???
\\ரங்கன் said...
//சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))//
சாப்பிட்டால்???\\
பின்விளைவுகள் தெரியும்:))
வாங்க ரங்கன்,
வருகைக்கு நன்றி
\\ரங்கன் said...
//சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))//
சாப்பிட்டால்???\\
பின்விளைவுகள் தெரியும்:))//
பின்விளைவுகள் ஏதுமில்லை. (ஆஷிஷ் நெஸ்டத்திற்கே ஆவக்காய் தொட்டுத்தான் சாப்பிட்டிருக்கான். :)) )
நெஸ்டத்திற்கா.. பரவாயில்ல வீரமா வளர்த்திருக்கீங்க.. :)
ஓஹோ இதுதான் தோசக்காயா. தென்றல் சுவையா இருக்கும் போலிருக்கே.
கடுகு எல்லாமே மிக்ஸீயில் பொடி செய்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.
நன்றிப்பா. உடனே இதை வேண்டப்பட்டவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்:)
நெஸ்டத்திற்கா.//
ஆமாம் கயல். சும்மா உப்பு உரப்பா இருந்தாத்தான் சாப்பிட்ட திருப்தியே இருக்கும். அதுக்குன்னு அதிகம் காரமிருக்காது. ஊறுகாயில் இருக்கும் காரம் போதும்.
கடுகு எல்லாமே மிக்ஸீயில் பொடி செய்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.//
ஆமாம் வல்லிம்மா ஃப்ரெஷ்ஷா பொடி செய்வதால் கம கம தான்.
தக்காளி ஊறுகாயும் பதிவுல வரப்போகுது
/*அடுத்த நாள் ஊறுகாய் ரெடி. சுடு சோற்றில் ஊறுகாய் போட்டு
நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்......... :)))*/
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
வெள்ளரிக்காய் ஊறுகாய் என்றாலே வெளுத்துக்கட்டுபவர்களுக்கு ஒரு சின்ன தகவல். வெள்ளரிக்காவில் ஒரு அமிலம் சுரந்துவிடுமாம் அதை நாம் ஊறுகாயாக உட்கொண்டால் அஜீரணம் மற்றும் வியாதிகள் வந்து அல்லல் படுத்தும் என்பது பத்திரிக்கை செய்தி. எதுக்கும் பார்த்து சப்பு கொட்டுங்க.
நாவில் எச்சில் ஊருகிறது..
அன்புடன்,
அம்மு.
நறுக்கி காரம் சேர்த்த தோசக்காய் துண்டுகள் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் அரைத்து ஊறுகாயோடு சேர்த்தால் கொஞ்சம் க்ரேவி லுக்கோடு சூப்பராயிருக்கும்.
சூப்பரோ சூப்பர். இன்று தான் உங்கள் பக்கம் வந்தேன். அருமையா இருக்கு.
நாவின் சுவை நரம்புகளைச் சோதிக்கிறது படம்! செய்து பார்க்க ஆவல். இந்த மஞ்சள் வெள்ளரிக்க்காயதான் எல்லா இடங்களிலும் கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தால் முயற்சித்துப் பார்க்கலாம்.
Post a Comment