முக்கிய இடம்பெறுவது பச்சடி என அழைக்கப்படும்
துவையல்.
வெள்ளரிக்காய், கறிவேப்பிலை, கொத்துமல்லி,
தேங்காய், பீர்க்கங்காய் தோல், சொள சொள தோல்
என பல வகை துவையல்கள். மேற் சொன்ன எல்லாவற்றிற்கும்
வறுத்துக்கொள்ளும் அயிட்டம் மட்டும் ஒன்று தான்.
INGREDIENTS பட்டியல்: தனியா - 1 ஸ்புன், மி.வற்றல் - தேவையான அளவு, வெந்தயம் 1/2ஸ்பூன், புளி சிறிதளவு, உப்பு தேவையான அளவு |
செய்முறை:
பட்டியலில் உள்ள சாமான்களில் புளியைத் தவிர
மற்றவற்றை வாணலியில் எண்ணெய்
1 ஸ்புன் ஊற்றி பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டும் அந்த வாணலியில்
கொஞ்சம் பிரட்டிக்கொண்டால் 1 வாரம் வரைக் கெடாது.
மாங்காய் பச்சடி:
பட்டியலில் இருக்கும் சாமான்களில் புளி மட்டும் வேண்டாம்.
மாங்காயை கழுவி துண்டுகளாக்கிக்கொள்ளவும்.
மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் சாமான்களை பொடியாக்கிக்கொண்டு
மாங்காய் துண்டுகளைப்போட்டு அதிகம் மைய்ய அரைக்காமல்
படத்தில் இருப்பது போல் அரைத்தால் துவையல் ரெடி.
உப்பு,புளி,காரச்சுவையுடம் மாங்காய்த் துவையல்.
சோற்றில் பிசைந்து கொள்ளலாம். இட்லி,தோசை,
சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷும் ஆச்சு.
ஃப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைக்கலாம்.
6 comments:
அண்ணே, பரோட்டாவை சுத்தாமல் சப்பாத்தி மாதிரி நன்றாக
விரித்து போடுவார்கள் அது தான் வீச்சு, முட்டை போட்ட முட்டை
வீச்சு.... ட்ரை பண்ணி பாருங்க.....
good one..
குட் ஒன் அப்படின்னு போட்ட கமெண்ட் பக்கத்துல இருக்கற போட்டா சரியில்லயே???
அனைவருக்கும் பயனுள்ள பதிவு . பகிர்வுக்கு நன்றிகள் 1
ithuakappuram panthi podalaye en
அருமையான பதிவு..
Post a Comment