breakfastlunchdinner

Sunday, February 27, 2011

கொத்தமல்லி சாதம்

INGREDIENTS பட்டியல்

எங்க அம்மாகொத்தமல்லி சாதம்  செய்து தருவாங்க! அவங்க செஞ்சாங்கன்னாவாவ் எனச் சொல்ல வைக்கும் தனி டேஸ்ட் தான். திருமணமான பிறகு நானும் நிறைய தடவை செய்து பார்த்துட்டேன்.   ஆனாலும், அம்மாவோட கைப்பக்குவம் அளவுக்கு வரலை. அதுக்காகநல்லா இருக்காதா?”ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. ரொம்பவே நல்லா இருக்கும். அம்மா பண்ணும்போது சாதம் தனியா வடிச்சுட்டு கலவைய போட்டு கலப்பாங்க. ஆனா நான் இங்கு குளிர்காலங்களில் தனித்தனியா செய்தா ஆறிடும்கறதனால, கீழ்க்கண்ட முறைப்படி பண்ணுவேன். உங்களுக்கு எப்படி வசதியோ அது மாதிரி செய்து  சாப்பிடுங்க.

தேவையான பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 () 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு

தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
பெருங்காயம்சிறிதளவு

செய்முறை:-

அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறி வைக்கவும்.  நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம், வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைத்த கொத்தமல்லி விழுதையும்  போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிற விகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை  நிறுத்தி விடவும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்!  இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ, வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.

எப்போதும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களையே சாப்பிட்டு போரடித்து இருக்கும் எல்லோரும் இதைவாவ், இது ரொம்ப நல்லா இருக்கே!” என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டுவாங்க!

ஆதி.

10 comments:

pudugaithendral said...

super,

Thanks for sharing.

குறையொன்றுமில்லை. said...

நல்ல சுவையான குறிப்பு. நாளையே செய்துவிடுவேன்.

ADHI VENKAT said...

வாங்க புதுகைத் தென்றல்,

நன்றிங்க.

வாங்க லஷ்மி அம்மா,

செய்து பாருங்க. நன்றிம்மா.

AMMU MOHAN said...

முதல் முறை வருகிறேன்..ப்ளாக் அழகாகவும், குறிப்புக்கள் எளிமையாகவும் உள்ளது..அருமை..

Jaleela Kamal said...

வாவ் பார்க்கவே அருமையாக இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

பச்சைப்பசேல்ன்னு அழகா இருக்கு.

ADHI VENKAT said...

வாங்க அம்மு மோகன்,

நன்றிங்க.

வாங்க ஜலீலா கமல்,

நன்றிங்க.

வாங்க அமைதிச்சாரல்,

நன்றிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக் லே அவுட் நீட்

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

நெல்லைத் தமிழன் said...

இதுதான் நான் செய்துபார்த்து சுத்தமாக வராதது. யார் பிளாக்கில் செய்முறையைப் படித்தோம் என்று மறந்துவிட்டது. இன்றுதான் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. குக்கரில் நன்றாக வைத்தும், சாதம் வேகவில்லை. என்ன தவறு என்று தெரியவில்லை. அதுக்குப்பதிலாக, சாதத்தைத் தனியாக வடித்து, இந்த மிக்ஸைக் கலந்து சாப்பிட்டுருக்கலாம். அன்னைக்கு சாப்பாடு போச்சு.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines