breakfastlunchdinner

Tuesday, January 15, 2008

சக்கரைப்பொங்கலும், வெண் பொங்கலும்.

முதல்லே ஒரு சந்தேகம் வந்து எட்டிப்பாக்குது. சக்கரைக்கு எதிர்ப்பதம்ன்னு சொன்னா உப்புதானே? இல்லை என்று சொல்பவர்கள் கவிஞர் எழுதுனதைக் கவனிக்கவும்.

"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"

வெண் பொங்கல்னு நிறத்தை வச்சுச் சொல்லும்போது,மற்றதை பிரவுண் பொங்கல்னு ஏன் சொல்லலை?

இனிப்புப் பொங்கலும் உப்புப் பொங்கலும் சொன்னால் ஆகாதா?

ஏன், எப்படின்னு உக்கார்ந்து யோசிக்கவும். அடுத்த பொங்கலுக்கு இன்னும் ஒரு வருசம் இடைவெளி இருக்கு.


சக்கரை என்ற இனிப்புப்பொங்கல் : (துளசியின் இஷ்டைலு)

அதுக்கு முன்னால் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். ( டிஸ்கி என்பது தமிழ்ச்சொல். மேல்விவரம் கொத்ஸ் தருவார்)

ஹெல்த் நட்ஸ்கள் இந்தப் பக்கம் வரவேண்டாம்.


தேவையான பொருட்கள்:

அரிசி: 1 கப்

கடலைப்பருப்பு: கால் கப்

பாசிப் பருப்பு : கால் கப்

பால்: ஒன்னரைக் கப்

முந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க?)

உலர்ந்த திராட்சை( சுல்த்தானா): 2 மேசைக் கரண்டி

நெய்: அரைக் கப்

கோல்டன் சிரப்: 1 கப் ( வெல்லப்பாகுதான். டின்லே வருது)

தேங்காய் துருவியது: அரைக் கப்.( நான், டெஸிகேட்டட் தேங்காய்(தான்) போடுவேன்)

ஜாதிக்காய் : பொடிச்சது 1 சிட்டிகை

ஏலக்காய்: 4 ( உரித்தோ உரிக்காமலோ ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளணும்)

கிராம்பு : 5

பட்டை: ஒரு துண்டு( ரெண்டு இஞ்சு நீளத்தில்)

பச்சைக் கற்பூரம்: கால் சிட்டிகை

செய்முறை:

வெறும் வாணலியில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை கருக்காமல் வறுத்துக்கொள்ளணும். அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு அதே வாணலியில் பாசிப்பருப்பையும் இதே போல மணம் வரும்வரை வறுத்து எடுக்கணும்.

அரிசி, க & பா. பருப்புகளைச் சேர்த்து நன்றாக மூன்று முறை களைந்து எடுத்து( இந்தியர்களுக்கு அடையாளமாம் மூணு முறை கழுவறது)ஒரு குக்கர் பாத்திரத்தில் போட்டுப் பாலும், ரெண்டு கப் தண்ணீரும் சேர்த்து மூணு விசில் வரை அடுப்பில் வச்சு எடுத்துக்கணும்.

கொஞ்சம் பெரிய வாணலியை அடுப்பில் வைத்துக் கொஞ்சம் நெய் ஊற்றி மு. பருப்பு & திராட்சையைப் பொரிச்சு எடுத்துத் தனியா வச்சுக்கணும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துப் பட்டை, கிராம்புகளை லேசாப் பொரிச்சுட்டு, ஜாதிக்காய் தூளைத் தூவணும்.அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கணும்( இந்த சமயங்களில் அடுப்பு சிம்லே இருக்கணும். தீவட்டியா தீவச்சுக் கருக்கிடாதீங்கப்பு) அடுத்து, வெந்த அரிசி பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கிட்டே அந்த கோல்டன் சிரப்பை ஊத்துங்க.

மீதி இருக்கும் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறனும். நல்லா எல்லாம் ஒண்ணோடொண்ணு சேர்ந்து நிறம் எல்லாம் ஒண்ணுபோல இளம் மஞ்சள்/பிரவுண் ஆனதும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து இளக்கிட்டு, முந்திரி & சுல்த்தானா வையும் சேர்த்துக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.



இப்ப வெண் பொங்கலைப் பார்க்கலாம்.

அரிசி : 1 கப்
பாசிப் பருப்பு: காலே அரைக்கால் கப்( 1/3 கப்ன்னு ஒரு அளவுக்கிண்ணம் கிடைக்குது!)

நெய்: 1/3 கப்

உப்பு: ஒரு தேக்கரண்டி

மிளகு: ஒரு தேக்கரண்டி

சீரகம்: ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள்: ரெண்டு சிட்டிகை

இஞ்சி: துருவியது : ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை: ஒரு இணுக்கு

முந்திரிப்பருப்பு: 20

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை மணம் வர வறுத்துக்கணும். அரிசி பருப்பைச் சேர்த்துக் கழுவிக்களைந்து(3) நாலரைக் கப் தண்ணீர் சேர்த்து அதே குக்கர் & அதே 3 விஸில். ஆச்சா?

பெரிய வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் பொன்நிறமாக வறுத்து எடுத்துத் தனியே வச்சுக்கணும். இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து மிளகு & சீரகம் பொரிச்சுட்டு அதிலேயே பெருங்காயம், இஞ்சி & கருவேப்பிலை, உப்பு சேர்த்து நல்லா மணம்வரும்வரை வதக்கிட்டு, குக்கரில் வெந்ததைப் போட்டுக் கிளறணும். அப்பப்ப நெய். ஒரு மூணு, நாலு நிமிஷம் கிளறிட்டுக் கடைசியில் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஒரு கிளறல்.
அவ்வளவுதான். பாத்திரத்தில் எடுத்து வச்சால் ஆச்சு.


வேலையை எளிதாக்க:

ரெண்டு பொங்கலுக்கும் உள்ள பாசிப்பருப்பை ஒரேதா வறுத்துட்டுப் பாகம் பிரிக்கலாம். முந்திரியையும் வறுத்துட்டு எடுத்து வச்சுட்டு, இதுக்கும் அதுக்குமா எடுத்து வச்சுக்கலாம்.

மிளகை முழுசாப்போட்டால் பசங்க அதைத் தனியா எடுத்துக் கடாசுதுங்கன்னு கவனிச்சது முதல், மிளகு சீரகத்தை ஒண்ணுரெண்டா உடைச்சுப் போட்டுருவேன்.( இப்ப என்ன செய்வீங்க?)

இதே போலத்தான் இஞ்சியை எடுத்து வீசுதுங்கன்னு அதையும் துருவிப்போடறது.

நல்ல மணமுள்ள நெய் வேணுமுன்னா, இங்கே கிடைக்கும் வெண்ணெய்(அதாங்க சூப்பர் மார்கெட்டில் டெய்ரி செக்ஷனில் கிடைக்கும் உப்பு சேர்த்ததும் வாங்கலாம்) ஒரு அரைக்கிலோ கட்டி வாங்கி உருக்குனா ஆச்சு. கமகம....

நெய் மீந்து போனா வீட்டுக்காச்சு. பருப்பு சாதம், பொடிவகைக்குச் சேர்த்துக்கலாம். நெய்வாசம் எனக்குப் பிடிக்கும். போகவர மூடியைத் திறந்து மணம் புடிச்சுக்குவேன்:-)ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹாஆஆஆஆஆஆ

நேரம் கிடைக்கும்போது ஆக்கிப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

இனிய (மாட்டுப்) பொங்கல் வாழ்த்து(க்)கள்.

36 comments:

இலவசக்கொத்தனார் said...

//ஹெல்த் நட்ஸ்கள் இந்தப் பக்கம் வரவேண்டாம்.//

சரி வரலை!

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

//சரி வரலை!//

அதுக்காக....?

கடைசி வரியைப் பார்க்காமப் போகணுமாக்கும்?

நம்ம பொங்கல்:-))))

Thekkikattan|தெகா said...

ஹெல்த் நட்ஸ்கள் இந்தப் பக்கம் வரவேண்டாம்.//

யாரைச் சொன்னீங்க, உண்மையைச் சொல்லுங்க :).

இப்படி படங்களா போட்டு என்னய நட்ஸ் ஆக்கிறீங்களே... படத்திலேயே சூப்பர்ப்பா இருக்கே அப்ப சாப்பிட்டா ...

பொங்கல் வாழ்த்துக்கள், துள்சிங்க!

சின்னப் பையன் said...

டமால்...டமால்...டமால்...
( பொங்கல்(களை) பார்த்த என் வாயிலிருந்து வழிந்த ஜொள்ளில், தங்கமணி வழுக்கி விழுந்த சத்தம்...ஹையா ஜாலி....)

கோவி.கண்ணன் said...

for your eyes only ! படத்தைப் போட்டு ஏமாத்திட்டிங்களே.

உங்க வீட்டு பொங்கலை சாப்பிட நியூசிலாந்துதான் வரமுடியும். கணனியுகத்தில் எல்லாத்தையும் கண்ணால் தான் காண முடியும் போல !
:)

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

வாங்க தெகா.

//நட்ஸ்.....//

:-))))

சக்கரைப்பொங்கலில் நட்ஸ் எல்லாம் உள்ளே போயிருச்சு. அப்ப படம் எடுக்கும் எண்ணம் வரலை(-:

இல்லேன்னா அங்கேயும் 'தாளிச்சு' உங்களை இன்னும் 'நட்ஸ்'ஆக்கி இருக்கலாம்:-))))))

வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால் said...

வாங்க ச்சின்னப் பையன் .

//டமால்...டமால்...டமால்...//

ரொம்ப ஆனந்தப்படாதீங்க.

கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க.

அதே தங்கமணி, கையில் கட்டையுடன்.....


டமால்...டமால்...டமால்...

:-))))

துளசி கோபால் said...

வாங்க கோவியாரே.

நீங்க மட்டும் நியூஸியிலே நம்ம வீட்டுக்கு வாங்க.......
'கணினிக் கண்ணால் காண்பதும் பொய் ' என்று சொல்லும் விதம் பொங்கலை இன்னும் நல்லாச் செஞ்சுதரேன்:-)))

துளசி கோபால் said...

வாங்க ச்சின்ன அம்மணி.

நன்றிப்பா.

Baby Pavan said...

எல்லா பாட்டியும் சூப்பரா தான் சமைப்பாங்க போல இருக்கு, அம்மாக்களுக்கு தான் சமைக்க தெரியல...

இது என் சொந்த சோக கதை....

எங்க பாட்டி என் கூட இருக்கப்ப எல்லாம் இப்படிதான் டேஸ்டா சமைச்சி போடுவாங்க...

அம்மா நீங்க இத படிக்காதிங்க

cheena (சீனா) said...

ஆகா ஆகா - வாயிலே எச்சி ஊறுது - உங்க வூட்டு பொங்கலெப் பாக்கும் போதும் படிக்கும் போதும். இரண்டு பொங்கல் - இனிப்பு அண்டு காரம்.
நன்று. ஆமா குக்கர் தான் அங்க எல்லாம். இங்க நாங்க பாலெப் பொங்க வுடுவோமுல்ல.

எங்க தங்கமணிக்கு கொழுப்பு ஜாஸ்தி. இவ்வ்ளோ முந்திரி போட்டா அவ்வ்ளோதான். நான் மிளகு, இஞ்சி தூக்கிப் போட்டுடுவேன். ம.பா கிட்டே சொல்றேன் இதப் பத்தி.

ம்ம்ம்ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அட்டகாசமா இருக்கே பொங்கல்.. ஆமா அது என்னவெண்பொங்கலுக்கு மட்டும்
ஸ்பெஷல் மரியாதை ... நிறைய முந்திரி கிடக்கு மேல அலங்காரத்துக்கு இனிப்பு பொங்கலுக்கு காணோம்...

✪சிந்தாநதி said...

படித்'தேன் சுவைத்'தேன்...

நன்றி

//(துளசியின் இஷ்டைலு)//

அது!

துளசி கோபால் said...

அடப் பேராண்டி பவன்,
இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி?

அம்மாவும் ஒரு நாள் பாட்டி ஆவாங்க. அப்ப அவுங்க சமையல் சூப்பரா இருக்கும்:-))))

துளசி கோபால் said...

வாங்க சீனா.

ஒரு நாள் பாலைப் பொங்க இந்தப் பேச்சா?

நாந்தான் தினமும் 'மாடர்னா' பாலைப் பொங்கவிடறேனே அது போதாதா?

தினம் மைக்ரோவுலே பால் பொங்கித்தான் போகுது:-))))

துளசி கோபால் said...

போன பின்னூட்டத்தொடர்ச்சி.....

தான் கைவசம் படங்கள் இருக்கேன்னு இன்னிக்குப் பதிவு போட்டாச்சு

துளசி கோபால் said...

வாங்க முத்துலெட்சுமி.

அதுவா? உங்ககிட்டே மட்டும் (?)ரகசியம் ஒண்ணு சொல்றேன். காதைக் கொடுங்க இப்படி.

சக்கரைப்பொங்கலில் முந்திரியெல்லாம் போட்டுக் கிளறி எடுத்துவச்சப்புறம்தான் போட்டோ எடுக்கலைன்னு நினைவு வந்துச்சு.

உப்புக்குள்ள முந்திரியை எடுத்து அலங்கரிச்சு 'டபுள் ஆக்ட்' கொடுத்துருக்கலாம்.

ஆனால்....'தோணலையே'......

பண்டிகை முடிஞ்சு ஒரு நாலைஞ்சு மணிநேரமான பிறகு, நம்ம சிந்தாநதியுடன் 'சாட்'டும்போது, சாப்பிடவாங்கவில் ஏதும் எழுதலையான்னு கேட்டுக்கிட்டு இருந்தார். நேரமில்லைன்னு சொன்னதுக்கு, பொங்கல் சமையல் குறிப்பு போடலாமேன்னார்.

அட! ஆமாம். படங்கள் கைவசம் இருக்கே. அதான் இன்னிக்குப் போட்டேன்.

மாட்டுப்பொங்கல் அன்னிக்கு உண்மை சொல்லலேன்னா மாடு முட்டிருமாம்:-))))

முதலில் போட்டதுலே பாதி பின்னூட்டத்தை ப்ளொக்கர் தின்னுருச்சு.

துளசி கோபால் said...

வாங்க சிந்தாநதி.

வாக்கைக் காப்பாத்திட்டேன்:-))))

வல்லிசிம்ஹன் said...

துளசி பொங்கல் பார்க்க சூப்பர்.
டேஸ்டும் இருந்திருக்கும்:))

கடலைப் பருப்பும் போடுவீங்களா??

ஹெல்த் நட்ஸ் தவிர மத்த நட்ஸ் இதைப் படிக்கலாமா:)))

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

கடலைப்பருப்பு?


நீங்க புத்தகம் சரியாப் படிக்கலை.

அம்மா சொல்லாததா?



உடனே மீனாட்சி அம்மாளைப் படிக்கவும்:-))))

பரிட்சைக்கு இதுலே இருந்து கேள்வி கேப்பேன்.....ஆமாம்:-)))

Easy Shop said...

Vithiasamana pongal recipe.

துளசி கோபால் said...

வாங்க EST.

புதுசா இருக்கீங்க?

சமையல் குறிப்பு வித்தியாசமா இருக்கா?

இருந்துட்டுப்போகட்டும். காலம் மாறுதுல்லே?

அதென்ன உங்க தளம் ஈஸி ஷாப்பிங் டிப்ஸ் கொடுக்குது போல.

நல்லாத்தான் இருக்கு. விரிவா எழுதுங்க. தமிழில் இருக்கட்டும்.

நானே ஷாப்பிங் அடிக்ட்தான். ஒரு நாள் நான் போகலைன்னா, சூப்பர்மார்கெட் ஆளுங்க, எனெக்கென்னவோ ஆகிப்போச்சுன்னு நினைச்சுக்குவாங்க:-)

இக்பால் said...

எங்க வீட்டுல பொங்கல் செய்யரதில்ல, பெரும்பாலும் நம்ம வீட்டுல காலை உணவு ரொட்டி _ பாயா அல்லது இடியாப்பம் பாயாதான். ஆனா நான் உணவகத்தில ரென்டு மூனு தடவை சாப்பிட்டுருக்கிறேன். அதுல மிதக்கிற எண்ணெய கண்டா நமக்கு அலர்ஜிதான். இருந்தாலும் இந்த பொங்கல பார்த்த உடனே சாப்பிடனும் போல இருக்கு.

துளசி கோபால் said...

வாங்க இக்பால்.

இதுலே எண்ணெய் சேர்க்கறதில்லைங்க. எல்லாம் நெய்தான்.

பிரியாணியிலேயும் நெய்தானுங்களே....

இல்லீங்களா?

தென்றல்sankar said...

முதல்லே ஒரு சந்தேகம் வந்து எட்டிப்பாக்குது. சக்கரைக்கு எதிர்ப்பதம்ன்னு சொன்னா உப்புதானே? இல்லை என்று சொல்பவர்கள் கவிஞர் எழுதுனதைக் கவனிக்கவும்.


"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"

உப்பு என்றால் அவளை அவனுக்கு பிடிக்காது என்று அர்த்தம்.
சர்க்கரை என்றால் அவனை பிடிக்க்கும் என்று அர்த்தம்.
ஒரு மேசையில் ஒரு தட்டில் சர்க்கரையும் ஒரு தட்டில் உப்பும் இருக்கிறது நீங்கள் என்ன உப்பையா ஒரு கை எடுப்பீர்கள்?நாயகியிடம் கவிதையில் கேட்கிரார் நாயகன் என்னை உனக்கு பிடிக்குமா?பிடிக்காதா? அதன் பொருள்தான் இது
"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"
என்னா துளசி சார் குழப்புதா?

துளசி கோபால் said...

தென்றல் சங்கர்,

//என்னா துளசி சார் குழப்புதா?//

ஆமாம். ரொம்பவே குழப்பம்தான்.

இந்த சார், மோர் எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு, அழகா அருமையா,

அக்கா, அம்மான்னு கூப்புடக்கூடாதா?

Anonymous said...

//போகவர மூடியைத் திறந்து மணம் புடிச்சுக்குவேன்:-)ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹாஆஆஆஆஆஆ//

ஆகா இதென்ன ட்ரக் புடிக்கிற போல சொல்றிங்க ;)

துளசி கோபால் said...

வாங்க தூயா.

என்ன இப்படி உங்க சமயல்க்கட்டைவிட்டு வெளியிலே வந்து எட்டிப் பார்க்கறீங்க? :-))))

ட்ரக் அடிக்ஷனைவிட இது செம அடிக்ஷன் எனக்கு.

தின்னத் தான் முடியாது. முகர்ந்தால் கொலஸ்ட்ரால் வராதுதானே?:-)))

இவன் said...

டீச்சர் நாங்களே இங்க ஆஸ்திரேலியாவில் சக்கரைப்பொங்கலோ வெண்பொங்கலோ கிடைக்காமல் நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலையுறோம்... இதில நீங்க வேற அதுதான் வேற வழி தெரியாம நானும் எனக்குத்தெரிஞ்ச ஒரு சமையல் குறிப்பை எழுதி இருக்கிறேன் வந்து பாருங்க

Anonymous said...

ahem ahem ahem..

naaku ellam echi ooruathae.. ippadi ellam padam pota ippavae indiavukku ticket podanum pola irukku.

துளசி கோபால் said...

இவனே.....

வெந்நீர் கொதிச்சுருச்சா? :-)))

துளசி கோபால் said...

வாங்க குமார்.

//ippavae indiavukku ticket podanum pola irukku.//

டிக்கெட் போட்டுட்டு???????

இந்தப் பொங்கல் 'துளசி விலாசில் 'மட்டுமே கிடைக்கும். பேசாம டிக்கெட்டை நியூஸிக்குப் போடுங்க:-)

Anonymous said...

Etho intha level'ku illatiyum.. veetulae irukara nadamaadum theivam oru range'ku pannuvaanga. Atleast athukaagavavathu india poganum.

Newzi'kum vanthuda vendiyathu thaan.. naan ellam thooya tamizhan (appparam yen tanglish'la type panrae'nu kekureenga puriyuthu.. tamizh'la type panna porumai illai) .. soru kanda edam thaan sorgam engalukku ellam.

Vaazhga pongal

Valarga athan manam.

இனியன் பாலாஜி said...

துள்சிசார் எனக்கு ரொம்பவும் பிடிச்ச டிபன் பொங்கல் தான் சார்.படத்தை பார்த்ததுமே நாக்கிலே
ஊறுது சார். ஒங்க கையாலே ஒரு நாள் கெடைக்குமா சார் ?
நான் வேன்னா பதிலுக்கு
எங்க ரத்னா கேப் பொஙகல் வாஙகி தரேன்.



பொங்கல் வாழ்த்துக்கள்.
இனியன் பாலாஜி

துளசி கோபால் said...

வாங்க பாலாஜி.

துளசி'யின்' சார் செஞ்சா சுவைக்கு நான் கேரண்டி இல்லை!!!

ஆயின் அதுவே உங்கள் விருப்பம் என்றால்......

உங்கள் விருப்பம் என்றால்......

விருப்பம் என்றால்......

என்றால்......

!!!!??????

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines