breakfast | lunch | dinner |
Tuesday, July 29, 2008
அவல் ரெசிப்பி.
கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.
கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,
இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.
நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்
கூட சாப்பிடலாம்.
எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்
தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.
அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களை
உங்களுக்கு சொல்ல வந்தேன்.
அவலை ஹிந்தியில் போஹான்னு சொல்வாங்க.
உருளைக்கிழங்கு போஹா, மசலா போஹா,
சிம்பிள் போஹா இதுதான் நாம் பார்க்கப்போகும்
ரெசிப்பிக்கள்.
முதலில் படாடா போஹா(உருளைக்கிழங்கு அவல்)
தேவையான சாமான்கள்:
கெட்டி அவலோ, சன்ன அவலோ எது கிடைக்குதோ
அது - 2 கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - நீளவாக்கில் கீறியது - 2
கொத்தமல்லி தழை கொஞ்சம்,
கறிவேப்பிலை - கொஞ்சம்,
கடுகு, சீரகம் - 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப,
தாளிக்க - 1ஸ்பூன் எண்ணைய்.
எலுமிச்சை ரசம் - 1 ஸ்பூன்
செய்முறை:
கெட்டி அவலாக இருந்தால் கழுவி ஒரு நிமிடம்
வைக்கவும். (சன்ன அவலாக இருந்தால்
1 ஸ்பூன் நீரூற்றி பிசறிக்கொள்ளவும்)
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
விட்டு முதலி இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை,
வதக்கி அதன் பிறகு கடுகு, சீரகம் தாளித்து
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், வேகவைத்துள்ள
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு
வதக்கவும்.
பிறகு கழுவி வைத்திருக்கும் அவலையும் சேர்த்து
நன்கு கலக்கவும்.
இறக்கிவைத்து எலுமிச்சை ரசம் சேர்த்து
கலக்கி மேலே கொத்தமல்லி தூவினால்
ஸ்ஸ்ஸ்ஸ்... போஹா ரெடி.
ப்ரேக் பாஸ்ட், டின்னர் எதுக்கும் பொருந்தும்.
தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி போதும்.
மசாலா போஹா:
தேவையான சாமன்களில் பச்சை மிளகாய்,இஞ்சிக்கு பதில்
1 ஸ்பூன் கரம் மசாலா.
செய்முறை அதேதான்.
சிம்பிள் போஹா:
அவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பொட்டுக்கடலை (அதாங்க ஒட்சக் கடலை)
தேங்காய்த் துருவல் 1 ஸ்பூன், உப்பு.
பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய்
மூன்றையும் மிக்சியில் சற்று கரகரப்பாக
பொடித்துக்கொள்ளவும். ( நோ வாட்டர். ஒன்லி
பவுடர் :) )
வாணலியில் எண்ணைய் விட்டு, கடுகு தாளித்து
கறிவேப்பிலை சேர்த்து கழுவி வைத்திருக்கும்
அவலையும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
செய்து வைத்திருக்கும் பொடியை மேலே
தூவி கொஞ்சம் பிரட்டி இறக்கி வைக்கவும்.
தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்.
விரும்புகிறவர்கள் கொஞ்சம் தயிர் சேத்து
அப்படியே சாப்பிடலாம்.
(பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள் இந்த
போஹா வகைகளை.)
இன்னுமொரு ரெசிப்பிக்கு இங்கே..
Subscribe to:
Post Comments (Atom)
அடுக்களையில்!
- hotel gravy (1)
- Methi (1)
- salt pongal (1)
- side dish (1)
- sweet pongal (1)
- venthayam (1)
- அவல் உப்புமா வகைகள் (1)
- ஆந்திரா உணவுவகைகள் (2)
- ஆந்திரா துவையல் வகைகள் (1)
- இறைச்சி (1)
- இனிப்பு (1)
- இனிப்புவகை (2)
- ஊறுகாய் (1)
- கத்தரிக்காய் (1)
- கலவை சாதம் (1)
- காய்கறிகள் (1)
- குழந்தை உணவு வகைகள் (1)
- குழம்பு (3)
- குறிப்பு (5)
- சப்பாத்தி வகைகள் (3)
- சப்பாத்திக்கு சப்ஜிகள் (1)
- சமையல் (1)
- தவல அடை (1)
- தேங்காய் பர்பி (1)
- தோசைகள் (1)
- பலகாரம் (1)
- பூண்டு ரசம் (1)
- பொரியல் வகைகள் (1)
- மசாலா டீ (1)
- மைக்ரோ அவன் குக்கிங் (2)
- மைக்ரோ வேவ் குக்கிங் (2)
- மைக்ரோவேவ் குக்கிங் (1)
- ரசம் (1)
- வெங்காயச் சட்னி (1)
- வெந்தய ரெசிபிக்கள் (1)
1 comment:
ரொம்ப உருளை (2) வேக வைக்கச் சொல்லியிருக்கீங்க. நாளை செய்துபார்க்கிறேன். ஒண்ணே ரொம்ப ஜாஸ்தின்னு தோணறது.
Post a Comment