தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...
கத்தரிக்காய் சட்னி
கத்தரிக்காய் - 2 பெரியது பச்சை மிளகாய் - 6 கொத்துமல்லி தழை- 1 கொத்து புளி - 1 எலுமிச்சை அளவு பெருங்காயம் - 1 சிட்டிகை உப்பு தாளிதம்: எண்ணெய், கடுகு, வற்றல் |
2. வேகவைத்த கத்தரிக்காய் ஆறியபின் பச்சைமிளகாய், புளி, உப்பு, பெருங்காயம், கொத்துமல்லி இலையுடன் சிறிதளவு நீர்விட்டு மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த விழுதை தாளிதம் செய்க.
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சுவையான தொட்டுகையாக கத்தரிக்காய் சட்னி தயார்.
மசாலா கத்தரிக்காய்
கத்தரிக்காய் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறு எலுமிச்சை அளவு தேங்காய் துருவல் - 1 கப் எண்ணெய் உப்பு தாளிதம்: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு |
புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிதம் செய்து புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.
வாணலி அல்லது பிரைபேனில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் அனைத்துவகை சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா கத்தரிக்காய் தயார்.
கத்தரிக்காய் கொத்சு
கத்தரிக்காய் - 4 சின்ன வெங்காயம் - 1 கப் புளி - 1 எலுமிச்சை அளவு வற்றல் மிளகாய் - 6 மல்லி - 3 கரண்டி கடலைப் பருப்பு - 3 கரண்டி நல்லெண்ணெய் - 100 மிலிகிராம் உப்பு |
புளியை சிறிது தண்ணீரில்கரைத்து புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், தோல் நீக்கிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதில் புளித் தண்ணீரை விட்டு வேகவைக்கவும். பொடித்து வைத்த மசாலாவை அதில் கொட்டி கிளறவும். அரை கப் நல்லெண்ணெயை அதில் ஊற்றி மூடி வைக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகச்சிறந்த தொட்டுகை.
கத்தரிக்காய் தொக்கு
கத்தரிக்காய் - 4 பெரியவெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 கெட்டியான புளிக்கரைசல் - அரை கப் பூண்டு - 4 பல் பெருங்காயப்பொடி - கால் கரண்டி நல்லெண்ணெய் - 100 மில்லி மஞ்சள்தூள் - அரை கரண்டி மிளமாய்த்தூள் - 1 கரண்டி உப்பு தாளிதம்: வற்றல்மிளகாய், கடுகு, கறிவேப்பிலை |
வெங்காயம், தக்காளி, பூண்டு,பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிதம் செய்தபின் நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின் புளிக் கரைசலையும் மசித்து வைத்த கத்தரிக்காயையும் சேர்த்து கிளறவும்.
வெஜிடபிள் பிரியாணி, அனைத்து வகை சாதங்கள், தனிச்சோறு உட்பட அனைத்துக்கும் ஏற்ற தொட்டுகை இது.
3 comments:
kathirikai super.
kathirikai recipie super
கத்தரிக்காய் பேர கேட்டாளே நாக்கு ஊருதே. ஆனா யாருங்க சமைச்சு தறது
Post a Comment