INGREDIENTS பட்டியல் ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன். |
செய்முறை:
கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.
அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.
இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.
கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக
உதவும்.
1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம்.
10 comments:
செய்முறைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
நன்றி தென்றல். நான் செய்து பார்க்கிறேன். நல்லா இருக்குமா:))
வாங்க வல்லிம்மா,
மோர்க்குழு மாதிரி இருக்கும். மோர் இல்லாம செய்வது தான் சங்கட்டி.
செஞ்சி் பாத்துட்டு சொல்லுங்க.
keppaikku english la enna?
நீங்க இங்கிலிஷ்ல படிக்கறதா நினைச்சு தமிழ் பேரை படிங்க.. அது தான இங்கிலீஷ் ஆகிடும்.. :) :) :)
இன்னிக்கு டிபன் இது தான். புதினா துவையலோடு சாப்பிட்டேன். எனக்கு பிடிச்சது..
செஞ்சு பாத்தாச்சா!!!
சூப்பர் அமுதா.
naakku uruthu. arumai
naakku uruthu//
:)))))))
Post a Comment