breakfastlunchdinner

Saturday, December 16, 2006

கதிர்வடை

தேவையான பொருட்கள்

அரிசிமாவு-100g
கடலைமாவு-100g
மைதாமாவு-100g
பெரியவெங்காயம்-2
கறிவேப்பிலை-2 கொத்து
வேர்க்கடலை-100g
மிளகாய்த்தூள்-2 கரண்டி
பெருங்காயத்தூள்-அரை கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை

மாவு வகைகளை நன்கு கலந்து கொள்ளவும். வெங்காயத்தை காரட் துருவியில் துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலையை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வேர்க்கடலையை மிக்சியில் ஒரு அடி மட்டும் அடித்து சிதைத்துக் கொள்ளவும். (பொடிந்து மாவாகிவிடக்கூடாது) எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு பிசைந்து கொள்ளவும். சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

கதிர்வடை தயார். தனியாகவும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சுவை பற்றி கூறவும்.

எண்ணெய் பலகாரம் சாப்பிடுவது தீமை என்று சொல்லி விட்டு எண்ணெய்ப் பலகாரம் செய்வதையே போட்டிருப்பதற்கான தர்ம அடிகள் வருவதற்குள் எஸ்கேப்....

8 comments:

பொன்ஸ்~~Poorna said...

போட்டோ ப்ளீஸ்...

Anonymous said...

டிஜி கேம் இல்லையே.

என் யாஷிகாவில் எடுத்து.... பிரின்ட் போட்டு வாங்கி... ஸ்கேன் செய்து...அடுத்த தடவை செய்யும போது பார்க்கலாம்.

k said...

woww...a cooking blog!..recipe sounds interesting! gonna try it out sometime! :)

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

சிந்தாநதி,
மா இன்ஞி[ தமிழ் keyboard குழப்பம் ]mango ginger pickle.இத்துடன் செய்முறை.தேவையான பொருட்கள்:
100 கிராம் மாஇன்சி
100 கிராம் வெள்ளைப்பூண்டு
புளிக்கரைசல் ஒரு கப்
மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
வெந்தயத்தூள்
உப்பு
மாஇஞ்சி[spelling] கண்டு பிடித்து விட்டேன்.+வெள்ளைப்பூண்டை மிகவும் பொடியதாக அரிந்து கொள்ளலாம்.அல்லது mixieயில் அரைத்துக் கொள்ளலாம்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு தாளித்து,அரைத்த இஞ்சி+பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கிய பின்,
புளிக்கரைசல்,உப்பு,மிளகாய்த்தூள்,ம.தூள்,பெ.தூள்,வெ.தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
கார்த்திக் அம்மா

துளசி கோபால் said...

வடைன்னதும் எப்படி ஆஜரானேன் பாருங்க:-)

இதே வடை (அந்த வேர்க்கடலை நீங்கலாக)ரெஸிபிதான் நான் போனவருஷம் 'தபால்வடை'ன்னு போட்டேன். செஞ்சு தந்தது கவினர் மதுமிதா.

துளசி கோபால் said...

'கவிஞர்'ன்னு இருக்கணும்.

cheena (சீனா) said...

ஆமா துளசி கோபாலுக்குச் சமைக்கத் தெரியாதா ?? முத்துலெட்சுமியும், சிந்தாநதியும் தான் சமைச்சிருக்காங்க ?

Thenammai Lakshmanan said...

அஹா அருமை. :)

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines