breakfastlunchdinner

Monday, March 5, 2007

விதவிதமாய் வித்தியாசமாய்

கலர் கலராய் தோசை செய்து எங்களை அம்மா அசத்துவார்கள். காயைக் கண்டாலே நாங்க ஓடுவோம் . [அது தானே இப்போ கண்ணாடி B-( ] அம்மாவும் குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். விதவிதமாய் வித்தியாசமாய் தோசைகள்.
பிங்க் கலர் தோசை

பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் துருவி எடுத்துக் கொண்டு கொஞ்சம் வெங்காயம் வேண்டுமென்றால் பச்சை மிளகாயும் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அதனை தோசை மாவில் போட்டு பிங்க் கலர் தோசை செய்யலாம்.

பச்சை கலர் தோசை

முளை கட்டிய பச்சைபயிறை கொஞ்சமாக அரைத்துக் கொள்ளுங்கள் . இத்துடன் வெங்காயத்தாள் இரண்டைப் பொடியாக நறுக்கி அதனை தோசை மாவுடன் சேர்த்து கலக்கி பச்சை கலர் தோசை செய்யலாம். மாவு இல்லாமல் இதனை கெட்டியாக அடை போலவும் செய்யலாம்.

சிகப்பு கலர் தோசை

கோதுமை ரவையை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் மூன்று தக்காளியையும் அரைத்து ஊற்றி
சிகப்பு கலர் தோசை செய்யலாம்.

மஞ்சள் கலர் தோசை

கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து கரைத்து மஞ்சள் கலர் தோசை செய்யலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் என் பெண்ணுக்கு அவள் அத்தை விதவிதமான வடிவத்தில் சுட்டு தருவாள்.

இன்றைக்கு என்ன வடிவம் வேண்டும் ஆர்டர் எடுக்கிறேன் என்பாள். இவளும் ம்..லேடர் முடியுமா? என்பாள். ஓகே மேடம்.
லேடர் தோசை ஒன்னு ஆர்டர் என்பாள்., பென்சில் நோட்டோடு.
அப்புறம் ரெண்டு கோடு அருகில் வரைந்து நடுவில் இணைக்கும்
சிறு சிறு கோடுகளுடன் லேடர் அதாங்க ஏணி ரெடியாகும்.

சில நாள் சன் தோசை, மூன் தோசை, ஸ்டார் தோசை,
டார்ட்டாய்ஸ் தோசை கூட தயாராகும். எப்படியோ மாவு பணியாரமாகனும்.. குழந்தை சாப்பிடனும். அவ்வளவு தாங்க.


என்ன இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கலர் என்ன வடிவத்தில் தோசை செய்யப் போறீங்க?
யோசிக்க ஆரம்பிச்சாச்சா?

15 comments:

✪சிந்தாநதி said...

அழகான தோசைக்குறிப்புகள்!

Radha Sriram said...

தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்துமாவும்
அறைச்சு சுட்ட தோசை
அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1

தோசைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க.....இங்க வசந்த பவன்ல தோசா டே ன்னு ஒரு நாள் இருக்கு
வித வித மான தோசை போடராங்க. ஆனா இந்த pizza தோசைன்னு ஒண்ண போட்டு authenticity ய கெடுக்கராங்க.நல்ல தோசை பதிவு!!!

சேதுக்கரசி said...

குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்..

குழந்தைகளை சாப்பிட வைக்க இன்னொரு வழி: விதவிதமான வடிவங்களில் - சதுரம், முக்கோணம், கண்ணு மூக்கு வாய் வைத்து சிரிப்பான் தோசை, இப்படி...

அப்புறம், A - Z வரை 0 - 9 வரை என்று ஒரு நாளைக்கு ஒன்றிரண்டாக அனைத்து வடிவங்களிலும் தோசை வார்க்கலாம்.. தமிழ் எழுத்துக்களையும் முயற்சிக்கலாம் ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சிந்தாநதி.

நன்றி ராதா பாட்டு பாடிகிட்டே வந்திருக்கீங்க ..பிசா தோசைதானே
நம்ம ஊத்தப்பம் தாங்க அது.

சேதுக்கரசி பேசாம வகுப்பெடுக்கலாம் போல தோசைக்கல்லுல :-)

நானானி said...

கலர் தோசைகளுக்கெல்லாம் முன்னாலேயே....பூனை தோசை,யானை தோசை என்று அந்தந்த வடிவங்களில் சுடடுத்தருவேன்.என் குழந்தைககுக்கு
கூட ரெண்டு தோசை உள்ளே போகும்

துளசி கோபால் said...

சிகப்புக் கலரு ஜிங்குச்சா

பச்சைக் கலரு ஜிங்குச்சா

மஞ்சக் கலரு ஜிங்குச்சா

வண்ண வண்ண தோசைங்க

விருப்பமான டிசைனுங்க

கொஞ்சம் தின்னு பாருங்க

கூடி வந்து ஆடுங்க.

Radha Sriram said...

முத்துலக்ஷ்மி உங்களொடைய மத்த பதிவுகளுக்கு என்னால பின்னூட்ட முடியவில்லையே?? ஏன்னு தெரியல!!

Anonymous said...

இது சூப்பரான ஐடியாவா இருக்கு ... நன்றி நன்றி முத்துலட்சுமி ... இதுக்கு முன்னாடி கலர் தோசை பற்றி கேள்விப்பட்டதில்லை நான்! சத்துள்ள உணவாவும் இருக்கு!

காட்டாறு said...

கலக்கிட்டீங்க போங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானானி , துளசி ,மதுரா மற்றும்
காட்டாறு நன்றிகள் பல .

ராதா என்னப்பா வரவேண்டிய சில
பின்னூட்டம் வராம இருக்கா
தெரியலையே என்ன பிரச்சனைன்னு.

manipayal said...

இப்பதாங்க புரியுது தினமும் ஸ்வீட் கேட்கிற எனக்கு அம்மா வெல்லத்தோசையை ஏன் போட்டங்கன்னு?

நாஞ்சிலான் said...

நானும் தோசை பிரியன் தான்.

பெங்களூருவில் தோசை கேம்ப் என்று தோசை க்காகவே ஒரு கடை இருக்கு.

இன்னும் பல தோசை வகைகளை செய்து அடுக்க வேண்டுகிறேன். (முக்கியமா ஆந்திர பெசரட்டு).

மங்களூர் சிவா said...

நச்சினு நயந்தாரா வடிவத்துல தோசை சுட முடியுமா !?!?
சவால்!!

:)))

cheena (சீனா) said...

ஆகா - இவ்ளோ கலருலே தோசையா - தங்க்ஸ் ப்ளீஸ் நோட் இட்

சிவா - மறுமொழி தவறி வந்துடுச்சா இங்கே - உங்க வீட்டம்மா வரட்டும் - பேசுறேன் நானே - நயந்தாரா வேணுமா - அதுவும் நச்சுன்னு

தோசைக்கரண்டி சூடா இருக்கும் தெரியும்ல

கோவை விஜய் said...

நாலு வண்ணத்தில் தோசை சுட்டாச்சு
நாலு திசையெல்லம் அறிவிப்பு போட்டாச்சு

எந்த வடிவம் கேட்டாலும் ரெடியாச்சு
எப்படியாவது சப்பிட்டால் போதும் என்றாச்சு

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines