

இட்லி,தோசைக்கு இணையான ஜோடி தக்காளி
வெங்காயச் சட்னிதான். தேங்காய்ச் சட்னியுடன்
ஒப்பிடும் பொழுது இதில் கொழுப்புச் சத்து குறைவு.
இதனாலேயெ டயட்டில் இருப்பவர்களும் இதை
விரும்புகிறார்கள்.
காலை அவசரத்தில் தக்காளி, வெங்காயம்
வதக்கிக்கொண்டு இருக்க நேரம் இருக்காது.
அப்போது மைக்ரோ அவனில் செய்வேன்.
அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
INGREDIENTS பட்டியல் பெரிய வெங்காயம் - 2 ( நீளவாக்கிலோ, பொடியாகவோ அரிந்து கொள்ளவும்), தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 1/2 ஸ்பூன், |
மேற்சொன்னவை எல்லாவற்றையும் கலந்து
மைக்ரோ அவன் பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்கள்
வைத்தால் நன்கு வதங்கிவிடும். நடுவில் ஒரு
முறை வெளியே எடுத்து திருப்பி விடவும்.
சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அடித்தால்
சட்னி ரெடி.
உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யும் சட்னிக்கு கூட
முதலில் எண்ணெய் விட்டு அதில் உ.பருப்பு சேர்த்து
2 நிமிடம் வைக்கவும். பிறகு தக்காளி வெங்காயம்,
மிளகாய் சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வைத்து
ஆறியதும் அரைக்கலாம்.
சுலபாமனது. செய்து பார்த்து சொல்லுங்கள்>