நாம் 1 நிமிட்ல அப்பளம் சுடலாம் அல்லது
காபி/டீ கலக்கலாம்.

அப்பளத்தை (லிச்சத் பாபட், உளுந்து அப்பளம்,
அரிசி அப்பளம் ஏன் வடக வகைகள் கூட) மேலே சொல்லியிருப்பது
போல் வைத்து 1 நிமிடம் அல்லது அதற்கும் குறைவான
நேரத்தில் வைக்கவும்.
நடுவில் அவனை நிறுத்தி அப்பளத்தை மறுபுறம்
திருப்பிவிடவும்.

இதோ அப்பளம் ரெடி.

இனி உங்களுக்கு ஏதாவது சாப்பிடவேண்டும் என்று
தோன்றும் போதெல்லாம் அப்பளத்தை சூட்டு,
நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி
தூவி எலுமிச்சை ரசம் கொஞ்சம் மேலே பிழிந்து
மசாலா பாப்பட் செய்து கொள்ளலாம்.
இதோடு சூடாக பிளாக் டீ இருந்தால்
சூப்பராக இருக்கும்ல.

அதுவும் 1 நிமிடத்தில் செய்யலாம்.

படத்தில் இருப்பது போல்
எந்த டிசைன் (சில்வர் கோட்டிங் போன்றவை)
இல்லாத கப்பில் தண்ணீர் வைத்து அவனில்
1 நிமிடம் வைக்கவும்.
எடுத்து டீ பேக், சர்க்கரை சேர்த்தால் டீ ரெடி.
காபி தான் வேணும் என்று நினைத்தால்
டிகாஷன்/ இன்ஸ்டண்ட் தூள் பால், சர்க்கரை
கல்ந்து அவனில் 1 நிமிடம் வைத்தால் காபி
ரெடி.
(மிக முக்கியமான விடயம் பால், தண்ணீர்
சுட வைத்து வெளியே எடுக்கும் பொழுது
முகத்தின் அருகே கொண்டு செல்லாதீர்கள்.
தண்ணீர் முகத்தில் தெளிக்கும் அபாயம்
உள்ளது)
8 comments:
/
(மிக முக்கியமான விடயம் பால், தண்ணீர்
சுட வைத்து வெளியே எடுக்கும் பொழுது
முகத்தின் அருகே கொண்டு செல்லாதீர்கள்.
தண்ணீர் முகத்தில் தெளிக்கும் அபாயம்
உள்ளது)
/
தங்கமணியிடம் செய்ய சொல்லும் பொழுது நல்லா இல்லை என்றால் சொல்லிவிடாதீர்கள் டீ காபியை முகத்தில் கொட்டிவிடும் அபாயம் உள்ளது
:)))
அக்கா,
நீங்க நல்லப் புரியுறமாதிரித்தான் எழுதுறீங்க, என்னாலத்தான் செஞ்சுபார்க்க முடியல. கடைசிய என் வீட்டுல சமைகட்ட மூடிட்டு, சமையலை இப்போ அவுட் சோர்ஸ் பண்ணிட்டேன். தினம் வீட்டுச் சாப்பாடு, வீட்டுக்கே வந்துடுது. சாப்பிட்டு பாத்திரம் கழுவிற வேலைக் கூட இல்லை.
நான் இந்த ஆட்டதுக்கு வர்ல சிவா.
:))))))))))))))))))))))))
நீங்க நல்லப் புரியுறமாதிரித்தான் எழுதுறீங்க, என்னாலத்தான் செஞ்சுபார்க்க முடியல//
சித்திரமும் கைபழக்கமுங்க. 2 அல்லது 3 தபா தப்பா ஆகும் அப்புறம்
சமையலில் தேர்ந்துவிடலாம்.
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏப்பம் புல்கட்டு கட்டிட்டேன்
புதுகை தென்றல்,
நலமா? :)
எல்லாம் புரிஞ்சுது. ஆனா இந்த வெங்காயம், தக்காளி நறுக்குறத மட்டும் , படம் போட்டு பாகம் குறிச்சிருந்தீங்கன்னா வசதியா இருந்திருக்கும்.
குறிப்புக்கு மிக்க நன்றி. :)))
நாம் 1 நிமிட்ல அப்பளம் சுடலாம் அல்லது
காபி/டீ கலக்கலாம்.
//
அக்கா உங்கள மாதிரி சுறுசுறுப்பான ஆளுங்கதான் இப்போ அமைச்சரவைக்குத் தேவைன்னு கரண்ட் கட்டுல வேகுற எல்லாரும் சொல்றாங்க :))
unga blog arumai
Post a Comment