பார்க்கலாம் வாங்க.
INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும், கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப |
1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)
2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.
3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.
4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.
சேமியா உப்புமா ரெடி.
1 comment:
வேணாம் அழுதுடுவேன். இந்த சேமியா உப்புமாவ எங்க காலேஜ் மெஸ்ஸுல நாலு வருசமா சாப்பிட்டு சாப்பிட்டு சேமியா உப்புமான்னா அலர்ஜியே ஆயிடுச்சு
Post a Comment