வரண்டு போகாது. சப்பாத்தி ப்ரியர்களுக்காக சில வகை சப்பாத்திக்கள்
மற்றும் அவற்றிற்கு தோதான சைட் டிஷ்கள் இனி வரும் பதிவுகளில்.
ரோட்டி மேக்கர் அது இதுன்னு ஆயிரம் வந்தாலும் நம் கையால்
குழவி கொண்டு செய்யும் சப்பாத்தியின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது.
இங்கே போனால் மாவு பிசைவது எப்படி என்பதிலிருந்து சப்பாத்தி
செய்வது வரை படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
மாவு கலக்கும் பொழுது சோடா, ஈஸ்ட் எதுவும் சேர்க்க தேவையில்லை.
கொஞ்சம் சூடான தண்ணீர் விட்டு பிசிறினாற்போல மாவை சேர்த்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, பிறகு கொஞ்சம் எண்ணெய்
விட்டு பிசைந்தாலே போதும். நான் சப்பாத்தியில் உப்பு சேர்ப்பது இல்லை.
சோறு சமைக்கும் பொழுது அதில் உப்பு போட்டு சமைப்பதில்லை. மற்ற
டிஷ்களில் இருக்கும் உப்பே அதற்கு போதுமானது. அதே போல் சப்பாத்திக்கும்
உப்பு போடாமல் செய்தாலும் சுவையாகவே இருக்கும்.
அதிகம் எண்ணெய் விடாமல் (மாவிலும் சரி, சுடும் பொழுதும் சரி)
செய்வது புல்கா/ரோட்டி
எண்ணெய் விட்டு பிசைந்து முக்கோணம் போல் மடித்து போட்டு
செய்வது சப்பாத்தி. சிலருக்கு இப்படி செய்யும் பொழுது முக்கோணமாக
வரும். பரவாயில்லை. நடுவில் குழி விழுந்து, ஓரம் கட்டியாக வராமல்
செய்தால் போதும். ஷேப்பை பற்றி கவலைப்பட வேண்டாம். சித்திரமும்
கைப்பழக்கம். பழக பழக அழகான ஷேப் வந்துவிடும்.
இந்த வீடியோவில் சப்பாத்தி செய்வது எப்படின்னு
காட்டியிருக்காங்க.
INGREDIENTS பட்டியல் கோதுமை மாவு - 2 கப், கொஞ்சம் சுடு தண்ணீர், 2 ஸ்பூன் சமையல் எண்ணெய், |
2 comments:
dhanks muthuletchumi
//சப்பாத்தியில் உப்பு சேர்ப்பது இல்லை.
சோறு சமைக்கும் பொழுது அதில் உப்பு போட்டு சமைப்பதில்லை//
ஸேம் பிளட்!!
Post a Comment