breakfastlunchdinner

Friday, January 21, 2011

hotel gravy வீட்டிலே - ரெசிப்பிக்களுடன் - 2

என்ன பேசிக் க்ரேவி செஞ்சு வெச்சுக்கிட்டீங்களா?
இந்த க்ரேவியை நாம ஒரு வாரத்துக்குத் தேவையான அளவு
செஞ்சு ஃப்ரிட்ஜல் வெச்சுக்கிடலாம். அப்புறம் கலக்கலா
ரெசிப்பிக்கள் செய்ய வேண்டியத் தான்.

என்னென்ன ரெசிப்பிக்கள் செய்யலாம்னு பாப்போம்.


பனீர் பட்டர் மசாலா:

INGREDIENTS பட்டியல் தாளிக்க: பொடிசாக நறுக்கிய குடைமிளகாய்- 1 ஸ்பூன்
கசூரி மேத்தி கொஞ்சம், ஜீரகம் கொஞ்சம், தக்காளி அரிந்தது
1

பனீர் துண்டுகள் 200 கிராம்.




செய்முறை:
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் வைத்து ஜீரகம், கசூரி மேத்தி,
குடமிளகாய் சேர்த்து தாளிக்கவும் பிறகு தக்காளி சேர்த்து
வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் பனீர் துண்டுகளை சேர்த்து வதக்கி
தேவையான அளவு பேசிக் க்ரேவியை சேர்க்கவும்.

இப்பொழுது மிளகாய்த்தூள், தனியா தூள், கொஞ்சம் கரம் மசாலா
(எல்லாம் பேசிக் க்ரேவிலியே இருக்கு, ஆனாலும் ருசிக்காக
கொஞ்சம் தனியாக சேர்க்க வேண்டும்)
சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டால் ரெடி.
கம கம பனீர் பட்டர் மசாலாவை க்ரீம் அல்லது பட்டர்
மேலே விட்டு பரிமாறவும்.

இந்த பேசிக் க்ரேவி சேத்து செஞ்சா அது ஹரியாலை பனீர்
இல்லாட்டி வெறும் பாலக், வெங்காயம் சீரகம் கொதிக்க வைத்து
அரைத்து செஞ்சா அது பாலக் பனீர். (பனீருக்கு பதில் ஆலு சேர்த்தால்
ஆலூ பாலக்) பனீரை துறுவி அலங்கரிக்கலாம்.



INGREDIENTS பட்டியல் இதுக்கு பேசிக் க்ரேவி தயாரிப்பது இப்படித்தான்.

தாளிக்கும் பொழுது பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,
இஞ்சி பூண்டு விழுது, ஜீரகம் எல்லாம் சேர்த்து தாளித்து
அதில் தக்காளி விழுதை போட்டு கொதித்ததும், வெங்காயப்
பேஸ்டுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பு, தனியா தூள்
மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கினால்
பஞ்சாபி பேசிக் க்ரேவி ரெடி.

சன்னாவை ஊற வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.




செய்முறை:
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஜீரகம், கசூரி மேத்தி,
குடமிளகாய், இஞ்சி துண்டுகள் (பொடிதாக அரிந்தது)
பூண்டு(பொடிதாக அரிந்தது) சேர்த்து தாளிக்கவும்.

இதில் பேசிக் க்ரேவியைச் சேர்த்து கொஞ்சம் கரம் மசாலா,
தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அத்துடன்
வேக வைத்திருக்கும் சன்னாவையும் சேர்த்து கொதிக்க
விட்டால் சன்னா மசாலா ரெடி.


(க்ரேவி கொஞ்சம் கெட்டியாக வேண்டும் என்று விரும்பினால்
அரைக்கும் விழுதுடன் கொஞ்சம்(2 ஸ்பூன் அளவு) சன்னாவை
சேர்த்து அரைத்து சேர்க்கவும்)

கொத்துமல்லித் தூவி வட்ட வட்ட வெங்காயத்துடன்
பரிமாறலாம்.


இதே முறையில் ராஜ்மா, தால்மக்கனி செய்யலாம்.
தால்மக்கனிக்கு அதிகம் பட்டர் சேர்க்க வேண்டும்.
இஞ்சி போடாமல் பூண்டு மட்டும் சேர்க்க வேண்டும்.

வீக் எண்ட்ல செஞ்சு அசத்துங்க.

HAPPY WEEKEND

5 comments:

ADHI VENKAT said...

நிறைய டிப்ஸ் குடுத்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

pudugaithendral said...

வருகைக்கும் நன்றி கோவை2தில்லி

எண்ணங்கள் 13189034291840215795 said...

சூப்பருங்க.. நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி பயணங்களும் எண்ணங்களும்

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines