breakfastlunchdinner

Wednesday, January 19, 2011

தேப்லா


தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஏதும் தேவையில்லாத ஒரு சப்பாத்தி
வகை இது. இது குஜராத்தியரின் உணவு. பிள்ளைகள் விரும்பினால்
தேன் இருந்தால் கூட போதும். ஜமாய்த்து விடலாம். பள்ளிக்கு
அனுப்ப ஒரு சூப்பர் டிஷ். பயணத்தின் போது எடுத்துச் செல்ல
நல்ல துணை. 3 நாள் ஆனாலும் கெடாது.

INGREDIENTS பட்டியல் கோதுமை மாவு - 1 கப்,தயிர்/மோர் 1/2 கப் மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தனியா பொடி 1 ஸ்பூன், எண்ணெய்- 1 ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் சப்பாத்தி சுட விருப்பப்பட்டால் கசூரி மேத்தி கொஞ்சம்.

மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கசூரி மேத்தி எல்லாம்
ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தயிர் விட்டு
(தண்ணீர் சேர்க்க வேண்டாம்) பிசையவும். கொஞ்சம் எண்ணெய்
விட்டு நன்கு கைகளால் பிசைந்து 10 நிமிடவும் ஊற விடவும்.

தேவையான அளவில் உருண்டை செய்து சப்பாத்தி செய்வது
போல செய்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இருபுறமும்
நன்கு சிவக்க எடுக்கவும். நெய் விட்டு சுட்டு எடுத்து வைத்தால்
தேப்லா ரெடி. சுடச்சுட அதிக காரமில்லாமல் தொட்டுக்கொள்ள
ஏதும் தேவையில்லாமல் சுவையான தேப்லா ரெடி.

சிலர் கொஞ்சம் கடலைமாவு சேர்த்து செய்பவர்களும் உண்டு.

4 comments:

சாந்தி மாரியப்பன் said...

பச்சைமிளகாய் ஊறுகாய் இதுக்கு செம ஜோடியா இருக்குதுப்பா..

pudugaithendral said...

நன்றி அமைதிச்சாரல்

Mahi said...

கூகுளில் வேறு ஏதோ தேடுகையில் உங்கள் தளத்துக்கு வந்தேன். 'தேப்லா'ரெசிப்பி புதுசா இருந்தது..செய்துபார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்ததுங்க. நன்றி!

pudugaithendral said...

வாங்க மகி,

தேப்லா ரெசிப்பி என்னுடையது:)

செய்து பார்த்து ருசித்தமைக்கு மிக்க நன்றி

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines