breakfastlunchdinner

Thursday, January 20, 2011

HOTEL GRAVY - வீட்டிலேயே செய்யலாம்.

நாம என்னதான் பனீர் பட்டர் மசாலா, தால் மக்கனி,
சன்னா மசாலா வீட்டுல செஞ்சாலும் ,”நல்லாயிருக்குன்னு!”
பசங்களும், கணவரும் சொல்வாங்க தான். உண்மையில்
ஹோட்டல் க்ரேவி மாதிரி வரமாட்டீங்குதேன்னு நமக்கேத்
தோணும். ருசி சரியா இருந்தாலும் அந்த க்ரேவி டேஸ்ட்
வித்யாசமா இருக்கும்.

தக்காளி வெங்காயம் அரைச்சு மசாலா சேத்து, ஊற வெச்சிருக்கும்
சன்னாவையும் போட்டு குக்கரில் 5 விசில் அடிச்சா சன்னா
மசாலா ரெடின்னு நானும் தாங்க நினைச்சிருந்தேன். ஆனா
இப்ப நாம செய்யற சன்னா செம டேஸ்டா இருக்குன்னு
பசங்க பாராட்டு மழை தான். அந்த ரகசியத்தை உங்களுக்கும்
சொல்றேன்.

ஹோட்டலில் சமையல் கலரை கொட்டித்தான் சமைக்கிறாங்க.
அதனால கலர் அந்த மாதிரி கிடைக்காது. கலர் போடுவதில்
எனக்கு உடன் பாடில்லை. அதனால் இயற்கையான நிறம்
அருமையான ஹோட்டல் சுவை க்ரேவி செய்வோமா!!!

முதல்ல BASIC GRAVY செஞ்சு வெச்சுக்கணும்.
அதை எப்படி செய்வதுன்னு பாப்போம்.

BASIC GRAVYல 3 க்ரேவி வேணும்.

WHITE PASTE, YELLOW PASTE, RED PASTE

WHITE PASTE:
க்ரேவி முந்திரி அல்லது சமைக்கும் முந்திரி - 50 கிராம்
தர்பூஸ் பழ விதைகள் - 1 ஸ்பூன்.

(இவை பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
இரண்டையும் நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும்
மைய அரைத்துக்கொண்டால் வொயிட் பேஸ்ட் ரெடி.

YELLOW PASTE:
பெரிய வெங்காயம் வெட்டியது - 4
இதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து
வேகவைத்து வடிகட்டி அரைத்தால் மஞ்சள் பேஸ்ட்.
(வெங்காயத்தை வேக வைப்பதால் பச்சை வாசனை
போய் திக் க்ரேவி கிடைக்கும்)

RED PASTE:
5 தக்காளியை மிக்ஸியில் அடித்து வைத்து கொண்டால்
ரெட் பேஸ்ட் ரெடி.

இதை வெச்சுகிட்டு பேசிக் க்ரேவி எப்படி செய்வதுன்னு
பாப்போம். மேலே சொல்லியிருக்கும் க்ரேவியும் சம அளவுல
வர்ற மாதிரி பாத்துக்கணும்.
1 கப் WHITE PASTE + 1 கப்YELLOW PASTE + கப் RED PASTE


BASIC GRAVY செய்முறை:

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை,
1 துண்டு லவங்கப்பட்டை, 2 ஏலம், 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
சேத்து நல்லா வதக்கணும்.

அடுத்து தக்காளி பேஸ்டை ஊத்தி நல்லா கொதிக்க விடணும்.
அடுத்ததா மஞ்சள் பேஸ்ட், கடைசியா வெள்ளை பேஸ்ட்
சேர்த்து கொஞ்சமா தண்ணீ சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.

தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், ஜீரகப்பவுடர்,
கரம் மசாலா தலா ஒரு ஸ்பூன் சேர்த்து நல்லா வதக்கினா
பேசிக் க்ரேவி ரெடி

இதை வெச்சு ஹோட்டல் க்ரேவி டேஸ்ட்ல எப்படி சமைப்பது?
அடுத்த பதிவு அதான்.

4 comments:

ஆமினா said...

நல்லா இருக்கே

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேஜிக் :)

KarthigaVasudevan said...

போட்டோ பார்த்தாலே கிரேவி நல்லா இருக்கும் போல ...செய்து பார்த்திடலாம்.

Thanks for sharing புதுகைத் தென்றல

:)

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines